பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறுதியாக கலந்து கொள்ள போகிறவர்கள் இவர்கள்தானா? வெளியான முக்கிய அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருக்கிறது.
அதில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது.. அந்த வகையில் யார் யாரெல்லாம் இடம் பெற்று இருக்கிறார்கள் என்ற தகவல் பார்க்கலாம்.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த நிகழ்ச்சியாலும் அடித்துக் கொள்ள முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் முதல் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கப்படும் போது பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பும் விமர்சனங்களும் இருந்து வந்தது.
முன்னணி பிரபலங்கள் எப்படி தங்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆறாவது சீசன் நடந்து முடிந்தது. ஆனால் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத சர்ச்சைகளும் சண்டை சச்சரவுகளும் கடந்த ஆறாவது சீசனில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் ஆறாவது சீசன் பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் டைட்டில் கொடுக்கப்பட்டது கூட பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு பல பிரபலங்களும் கூட இந்த ஆறாவது சீசன் டைட்டில் வெற்றியாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் பலர் போட்டியாளராக வர இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் உத்தேச பட்டியல் வெளியாகும். அதில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போதும் வெளியாகி இருக்கும் போட்டியாளரில் யார் யார் பெயர் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிராக நடிக்கும் நடிகர் குமரன், நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த், மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமடைந்த ரவீனா, அதுபோல சின்னத்திரை நடிகர் விஷ்ணு, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா உள்ளிட்ட பலர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை நிவிஷாவும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனின் அதிகமான பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அது போல இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பிரபலமான பலர் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் இந்த சீசன் ரசிகர்களுக்கு அதிகமான பிடித்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications