பிக் பாஸ் ஐசுவின் காதலன் யார்? பரவும் செய்தி.. நிரூப் வெளியிட்ட சோகமான பதிவு.. இதை எதிர்பார்க்கலையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் காதல் சர்ச்சைகளும் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே தனக்கு ஒரு காதலன் வெளியே இருக்கிறான் என்று சொன்ன ஐசு நிக்சனுடன் நெருங்கி பழகி வருவது குறித்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஐசுவின் காதலன் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நிரூப் தான் என்று சில செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் நிரூப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், சர்ச்சைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. கடந்த சீசனை விட இந்த சீசன் பெஸ்ட் என்று சொல்ல முடியாத வகையில் தான் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ளே பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
அதில் ஒவ்வொரு சீசனிலும் மாறாத விஷயமாக காதல் கன்டென்ட் இருந்து வருகிறது. எல்லா சீசனிலும் ஒரு ஜோடி காதலர்களாக உள்ளே வலம் வருகிறார்கள். அந்த வகையில் இப்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதில் ஆரம்பத்தில் ரவீனா மற்றும் மணி இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலர் அவர்களைப் பற்றி கலாய்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போது அவர்களை விடவும் அதிகமாக நிக்சன் மற்றும் ஐசு ஜோடியின் நடவடிக்கை ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. என்னதான் இவர்கள் நண்பர்கள் என்று சொன்னாலும் நிக்சன் ஐசுவிடம் நடந்து கொள்ளும் விதம் பலருடைய அதிருப்தியை பெற்றிருக்கிறது. அதிலும் ஐசு எனக்கு ஏற்கனவே வெளியே ஒரு காதலன் இருக்கிறான் என்று சொல்லி இருந்தார்.
ஆனாலும் உனக்கு அவனை மூணு மாசமாக தான தெரியும் என்று நிக்சன் கூறி இருந்தார். இந்த நிலையில் ஐசு காதலிக்கும் நபர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நிரூப் தான் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதே நேரத்தில் ஐசுவின் காதலன் இப்போது ஐசு நிக்சனுடன் பழகி கொண்டிருப்பதை பார்க்கும்போது என்ன நிலைமை ஆவார் என்பது பற்றியும் பல மீம்ஸ்கள் பரவுகிறது.
இந்த நிலையில் நிரூம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் சோகமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு For this random click என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஐசுவின் நடவடிக்கையை பார்த்து தான் நிரூப் சோகத்தில் இருக்கிறாரா? அதனால் தான் இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா? ஒருவேளை பரவி வரும் செய்து உண்மை தானா என்று பல்வேறு கேள்விகளை கமெண்ட்களில் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் நிரூப் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும்போது இருந்து அமீர் குடும்பத்தோடு நெருங்கி பழகி வருகிறார். அவருடைய வீட்டு பங்க்ஷனிலும் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஐசுவின் சகோதரி பிறந்த நாள் பங்க்ஷனிலும் நிரூப் கலந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் ஐசு நான் மூன்று மாதமாக தான் காதலித்து வருகிறேன் என்று சொல்லி இருப்பதால் இது உண்மையான தகவலா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப்புக்கு அவருடைய முன்னாள் காதலியான நடிகை யாஷிகா ஆனந்த் மூலம் தான் வாய்ப்பு கிடைத்தது என்பது அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பது ஐசு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவராக பேசினால் தான் தெரியும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications