அந்தப் பெண்ணை இதனால் தான் காதலிக்கிறேன்.. வெளியே வந்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரதீப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

அதே நேரத்தில் அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

bigg boss tamil season 7 who is the Pradeep Love Girl

பெண்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் தான் காதலிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை முதல் கொண்டு பிரதீப் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். எந்த பக்கம் திரும்பினாலும் பிரதீப் பற்றிய செய்திகள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டது தவறு என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப்க்கு ஆதரவாக விசித்திரா, தினேஷ், அர்ச்சனா போன்ற ஒரு சில போட்டியாளர்கள் பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்த மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐசு, நிக்சன் முதலியவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப் வெளியே வந்த பிறகும் தன்னுடைய நக்கல் நையாண்டித்தனத்தை நிறுத்தியப்பாடு இல்லை. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய twitter பக்கங்களில் பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்களுக்கு நன்றி கூறியும், தன்னை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியது குறித்தும் அடிக்கடி மீம்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசனை பிறந்த நாளுக்கு கூட அவருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டு எதையும் தீர விசாரித்து விட்டு முடிவெடுங்கள் என்று மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார். அதோடு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கமல் நடித்த காட்சிகளை அவருக்கு போட்டு காட்டி இருக்கிறார்.

bigg boss tamil season 7 who is the Pradeep Love Girl

இப்படியாக இருக்கும் இடையில் சமீபத்தில் பிரதீப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருக்கிறார். தான் ஏற்கனவே ஏழு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அது பிரேக்கப் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு இன்னொரு பெண்ணை நான்கு வருடமாக காதலித்தேன்.

அதுவும் பிரேக்கப் ஆகிவிட்டது. இப்போது ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பெண் மிகவும் பொறுமைசாலி இது எங்கே வரை போகிறது என்று பார்ப்போம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் பிரதீப்பின் இந்த காதல், வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+