நடிகர் தினேஷ் வந்ததுமே டார்கெட் செய்யும் அந்த 4 போட்டியாளர்கள்.. இப்படியுமா பிளான் போடுவாங்க?
சென்னை; பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்டரியாக உள்ளே வந்திருக்கின்றனர்.
அதில் நடிகர் தினேஷும் ஒருவர். அவர் முதல் ஆளாக வீட்டிற்குள் என்ட்ரி ஆனதும் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் அவரை நல்ல விதமாகவே வரவேற்றனர்.

ஆனால் அதை தொடர்ந்து தினேஷ் குறித்து நான்கு போட்டியாளர்கள் அவருக்கு எதிராக பிளான் போட்டு டார்கெட் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 18 போட்டியாளர்களோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருந்த நிலையில் இதுவரைக்கும் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் 2 போட்டியாளர்கள் டபுள் எவிக்ஷன் காரணமாக வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் ஐந்து போட்டிகள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தனர்.
அதில் முதல் போட்டியாளராக தினேஷ் அறிமுகம் ஆகி இருந்தார். தினேஷ் ஏற்கனவே விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் பல சீரியல் களில் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருப்பது இவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
காரணம் கடந்த மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது கூட என்னிடம் யாரும் அப்படி அணுகவில்லை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போவேன் என்றும் கூறியிருந்தார். அதோடு நடிகை ரச்சிதா அதாவது இவருடைய மனைவிக்கும் இவருக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில் ரச்சிதா ஆசைப்பட்ட மாதிரி அந்த டைட்டிலை நான் வாங்கி அவருக்கு பரிசாக கொடுப்பேன் என்கிற தோணியில் பேசியும் இருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல கமல்ஹாசன் பேசிவிட்டு அவர் கிளம்பி போன பிறகு உள்ளே போட்டியாளர்கள் கும்பல் கும்பலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அதில் ஒரு கும்பலில் நிக்சன், மாயா, ஜோவிகா, பிரதீப் நான்கு பேரும் அமர்ந்து இருக்கின்றனர்.
அப்போது மாயா என்னிடம் புதுசா வந்திருக்கவங்க ஏதாவது பிரச்சனை பண்ணுனா நான் சரியா கேட்டு விட்டுருவேன் என்று சொல்ல, அதற்கு பிரதீப் ஆமா நானும் அப்படித்தான் நம்மகிட்ட ஏதாவது வம்புக்கு வந்தா நாம யாருன்னு காட்டிரனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நிக்சன் இவர்களுக்கு கை கொடுத்து தானும் உங்கள் அணியில் இருக்கிறேன்.
இப்பொழுது வந்திருக்கிறவங்களை நாம எல்லாரும் சேர்ந்து கட்டம் கட்டணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு தினேஷ் வந்ததும் கெத்தாக பேசினார். நாமதான் ஹீரோன்னு நினைச்சுகிட்டு இருந்தாரு. ஆனா அத தொடர்ந்து அடுத்து வைல்ட் கார்ட் இன்னமும் வராங்கன்னு தெரிஞ்சதும் அவருடைய முகம் சுருங்கிடுச்சு. இவருக்கு இந்த வீட்டில கஷ்டம் தான் என்று பேசி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications