விஜய் டயலாக்கை கமலிடம் சொல்லிக் காட்டிய விக்ரம்.. அதுவும் அந்த டயலாக்.. கடைசியில் இப்படி ஆகிவிட்டது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்பாக சரவணன் விக்ரம் பேசிய விஜய் டயலாக் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நிக்சன் கேப்டன்சி எப்படி இருந்தது என கமல்ஹாசன் கேட்டதற்கு விக்ரம் நன்றாக இருந்தது என்று சொல்லி விஜய் டயலாக்கை எடுத்துக்காட்டாக கூறியிருந்தார்.
ஒரு சில போட்டியாளர்கள் விக்ரம் 2.0 போல நிக்சன் கேப்டன்சி இருந்தது என்று கூறியிருந்தாலும், விக்ரம் பேசிய வார்த்தை ரசிகர்களின் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்று அறிவித்துக் கொண்ட சரவண விக்ரம் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் முன்பு பேசிய வார்த்தைகள் தான் இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது நேற்றைய எபிசோடில் இந்த வாரம் நிக்சனின் கேப்டன்சி எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் எல்லோருடமும் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் விக்ரம் சார் நிக்சன் கேப்டன் ஆவதற்கு முன்பே என்னிடம் பலமுறை நான் கேப்டன் ஆனால் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று சொல்லி இருந்தான். அவனுக்கு கேப்டன் ஆனதும் ஹவுஸ் மேட் யாருமே பட்டினியா இருக்கக்கூடாது என்று நினைத்தான். அதுபோல எல்லாரையும் ஜாலியாக இருக்க வைக்கணும் என்றும் நினைத்தான்.
அதற்காகத்தான் பல முயற்சிகளையும் செய்தான். ஆனால் இந்த முறை மணி டாஸ்க் வைக்கப்பட்டிருந்ததால் எல்லோரும் அதை அடித்து நிக்சனை அடுத்த வார நாமினேஷனுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற குறியில் இருந்ததால் சிலர் வேண்டுமென்றே கூட பிரச்சனை செய்திருந்தார்கள். அது நிக்சனுக்கு பிரச்சனையாக முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.
அதாவது தளபதி விஜய் டயலாக் கூட ஒண்ணு சொல்லுவார். நாம ஒன்னு செய்யணும் என்று நினைக்கிறோம். ஆனா அது நம்மள செஞ்சிட்டு போகிறது என்று, அதுபோலத்தான் என்று விக்ரமன் பேச அப்போது அங்கு அரங்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த நேரத்தில் கமல்ஹாசன் முகத்தை வைத்து இப்போது அதிகமான மீம்ஸ்களும் வலம் வருகிறது.
ஆரம்பத்தில் இருந்து விக்ரம் பிக் பாஸ் வீட்டிற்குள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எந்த பிரச்சனையையும் தைரியமாக பேச மாட்டேன் என்கிறார். புள்ளி கேங்கோடு சேர்ந்து இவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று பல குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனாலும் ஒரு சில நாட்களாக விக்ரமுக்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்டுகளும் வந்த வண்ணமாக இருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இவர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று உறுதியாக யாரையும் சொல்ல முடியாத வகையில் இருக்கிறது. ஆனாலும் தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்று அழைத்துக் கொண்டிருக்கும் விக்ரம் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக மாறுவாரா? இல்லை அதற்கு முன்பு வெளியேற்றப்படுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications