அடிச்சு தூக்கும் பிக் பாஸ் 8 ஆட்டம்.. இவரும் எலிமினேட் ஆகிறாரா? டபுள் எவிக்ஷன்? பரபரக்குதே பிக்பாஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினம் யார் வெளியேற போகிறார்கள் என்ற ஊகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் அதிரடியாக 2 எவிக்ஷன் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
பிக் பாஸ் வீடு தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.. 50 நாட்கள் கழித்துதான், ஆட்டம் சூடு பிடித்து நடந்து கொண்டிருக்கிறது.. பாய்ஸ் டீம், கேர்ள்ஸ் ஒரே அணியாக மாறியதால், ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.அந்தவகையில், இந்த வாரம் யார் எவிக்ஷன் எந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டு வருகிறது.

இந்த வாரம் முத்துக்குமரனுக்கு அதிக ஓட்டுக்கள் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு அடுத்தபடியாக, சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா என வாக்குகளை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, ராயன், ரஞ்சித், சத்தியா, ஆர்ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா ஆகிய 6 பேருமே வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர். இதில், தர்ஷிகாவை வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது...
விஜே விஷால்: ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக விளையாடி கொண்டிருந்த தர்ஷிகா திடீரென, விஜே விஷாலுடன் காதல் செய்து டிராக் மாறினார். கன்டென்ட் தர வேண்டுமே என்பதற்காக இப்படியொரு காதல் ரூட்டை தர்ஷிகா எடுத்தாலும், ரசிகர்கள் இதனை ரசிக்கவில்லை என்றே சொல்லலாம்.
"லாஸ்லியா - கவின் போல இப்படியெல்லாம் முயற்சிக்க வேண்டாம், ஒழுங்காக கேம் விளையாடுங்கள், பிக் பாஸ் வாய்ப்பை தவற விடாதீர்கள்" என்று சோஷியல் மீடியாவில் தர்ஷிகாவுக்கு அட்வைஸ்களை தர துவங்கிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், டெவில் டீம் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ள துவங்கியிருக்கிறார்கள். அதிலும், ஜாக்குலின், சவுந்தர்யாவுடன் தர்ஷிகா மோதியதுடன், தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
குறைவான வாக்குகள்: காதல் என்ற பெயரில் தர்ஷிகா கன்டென்ட் தந்தாலும், அவருக்கு வாக்குகள் மிகவும் குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். அதாவது தர்ஷிகா 4.14 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறாராம். அதேபோல, ஆனந்தி 3.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளாராம். அந்தவகையில் இவர்கள் 2 பேருமே இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், இப்போதைக்கு மொத்தம் 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். 60 நாட்களாகியும் இத்தனை பேர் ஒரே வீட்டில் விளையாடி வருவது சுவாரஸ்யத்தையே குறைத்து விடுகிறதாம். இனி வரும் நாட்களில், ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யம், பரபரப்பு இருக்க வேண்டுமானால், இன்று டபுள் எவிக்ஷன் இருக்கக்கூடுமாம்.
டபுள் எவிக்ஷன்: இதற்கு நடுவில், "கிரின்ஞ் காதலை" இனியும் சகிக்க முடியவில்லை, அதனால் விஷால் மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரில் ஒருவரை வெளியேற்ற வேண்டும் அல்லது இவர்கள் இருவரையுமே வெளியேற்றி விடுங்கள் என்று ரசிகர்கள் சொல்ல துவங்கியிருக்கிறார்காம்.. மொத்தத்தில் ஒரே ஒரு எலிமினேஷன் என்றால் தர்ஷிகாவாக இருக்க முடியும், டபுள் எவிக்ஷன் என்றால், தர்ஷிகா, மஞ்சரியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
அதேபோல, ஒவ்வொரு வாரமும் வெளியேற வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பது சாச்சனாவைதான். அப்படியானால் இன்றைய தினமும் சாச்சனா கிரேட் எஸ்கேப்பா? என்று கேட்டு வருகிறார்கள்..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications