பிக் பாஸ் விட்டு வெளியேறும் முன்பு காதில் அன்ஷிதா சொன்ன வார்த்தை! கெஞ்சிய விஷால்! விஜய் சேதுபதி ரியாக்ஷன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இருந்து நேற்று அன்ஷிதா எலிமினேட் ஆனார். அவர் வெளியேறும் போது வி ஜே விஷால் காதில் சில வார்த்தைகள் கூறியிருக்கிறார். அப்போது விஷால் ஒரு செயினை கொடுக்க அதை அன்ஷிதா வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதற்குப் பிறகு ஆறு போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக வந்தனர்.

ஆக மொத்தம் 24 பேரில் இந்த வாரம் நடந்த இரண்டு எவிக்ஷனோடு சேர்ந்து 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நேற்று அன்ஷிதா வெளியேறும் போது நடந்த சில சம்பவங்கள் இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது.
ஏற்கனவே வீஜே விஷால் தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவை ஏமாற்றி கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. தர்ஷிகா வெளியே செல்லும்போது தன்னுடைய அம்மாவின் நினைவாக வைத்திருந்த மோதிரத்தை கழட்டி கொடுத்துவிட்டு வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் அன்ஷிதா மற்றும் தர்ஷிகாவோடு விஷால் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் விஷாலை காதலிப்பதாக கூட ரோல் செய்யப்பட்டது. ஆனால் இதை சில வாரங்களுக்கு முன்பு ஆனந்தி அன்ஷிதாவிடம் கேள்வி கேட்டு தெளிவுபடுத்தி இருந்தார்.
நீ விஷாலிடம் என்ன மாதிரி பழகுகிற என்று கேட்டதற்கு, அன்ஷிதா நான் ஒரு நல்ல நண்பராக மட்டும் தான் பழகுறேன், ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது நான் செய்யாத தப்புக்கெல்லாம் என் மீது பழி வந்து விழுகிறது. அதனால் நான் யாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடவில்லை. நான் ஒரு நல்ல நண்பராக மட்டும் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
ஆனால் தர்ஷிகா விஷாலுடன் பேசி பழகியது காதலிப்பது போலத்தான் இருந்தது. ஆனால் விஷால் ஒருநாள் தர்ஷிகாவிடம் நமக்குள் இருக்கும் ஃபீலிங்ஸ்க்கான இடம் இது இல்லை. நாம வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வார். அடுத்த நாள் காலையில் மீண்டும் தர்ஷிகாவின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனால் தன்ஷிகா உள்ளேயே குழப்பமான மனநிலையில் தான் இருந்தார். ஆனால் வெளியே வந்த பிறகு தான் மனம் திறந்தி விட்டதாக கூறியிருந்தார். உள்ளே தனக்கு விஜே விஷால் மீது ஒரு கிரேஸ் இருந்தது உண்மைதான், ஆனால் வெளியே வந்த பிறகு உண்மையெல்லாம் தெரிந்து நான் மனம் மாறிவிட்டேன் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நேற்று அன்ஷிதா வெளியே செல்லும்போது அன்ஷிதா எல்லாரிடமும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு விடைபெறுகிறார். அப்போது விஷால் தன்னுடைய செயின் ஒன்றை அவரிடம் கொடுத்து இதை யாருக்கும் நான் கொடுத்ததில்லை நான் உனக்காக கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
அதோடு அன்ஷிதா கிளம்பும்போது தன்னிடம் அந்த வார்த்தையை சொல்லு சொல்லு என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஏற்கனவே தர்ஷிகா வெளியே போன பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு அன்ஷிதா மீது ஒரு ஃபீலிங் இருக்கிறது என்று விஷால் பேசிக் கொண்டிருந்தார்.
அதோடு நான் வெளியே சென்றால் உனக்காக காத்திருப்பேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் நேற்று அன்ஷிதா எலிமினேட் ஆனதும் விஷால் நான் வெளியே வந்து சொன்னதை செய்வேன் என்று சொல்லி இருக்கிறார். அதை பார்க்கும்போது விஷால் தன்னுடைய காதலைத்தான் மறைமுகமாக அன்ஷிதாவிடம் சொல்கிறாரா? என்று கேள்விகள் எழுகிறது.
அதுபோல அன்ஷிதா விஷாலுக்கு எந்த பதிலை சொல்லவில்லை என்றாலும் விஷால் கொடுத்த செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு விஜய் சேதுபதி முன்பு பேசும்போது கூட "பொறுமை ரொம்ப அவசியம்.. நல்லா விளையாடு... பார்த்துக்கலாம்" என்று சொல்லிக்கொண்டு விஷால் செயின் தன்னுடைய கழுத்தில் இருப்பதை தூக்கி காட்டுகிறார்.
இதை பார்த்து விஜய் சேதுபதி ஐயோ என்பது போல ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். கடந்த வாரத்தில் தர்ஷிகாவிடம் உங்களுடைய விளையாட்டு எந்த இடத்தில் விலகி இருக்கிறது என்று நீங்கள் புரிஞ்சுக்கோங்க, வெளியே போன பிறகு உங்களுக்கு நிறைய விஷயம் புரியும். ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் டக்கென்று எந்த முடிவும் எடுக்காதீங்க என்று அட்வைஸ் சொல்லியிருந்தார். ஆனால் நேற்று அன்ஷிதாவிடம் அதுபோல பெரிய அளவில் அட்வைஸ் கொடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications