Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ்க்கு பிறகு அர்னவ்விடம் பேசல.. காரணம் இதுதான்! தீபக் ரொம்ப நல்லவரு! அன்ஷிதா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து எவிக்ஷன் ஆகி வெளியே வந்த அன்ஷிதா தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்னாவிடம் பேசவில்லை, அதற்கு காரணம் இதுதான் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்க தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில போட்டியாளர்கள் மட்டும்தான் விஜய் டிவி பின்னணி இல்லாதவர்கள். ஆனால் அவர்களும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறார்கள். அதில் இந்த வாரத்தில் மிட்நைட் எவிக்ஷனில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று கேள்விகளும் இருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா, விஷால், அருண் மூன்று பேரும் மாறி மாறி கடைசி இடத்திற்கு வருகிறார்கள்.

அதனால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களும் விஜய் டிவி பிரபலங்கள்தான். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8

அன்ஷிதா ஏற்கனவே விஜய் டிவியில் செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியலில் அவரோடு நடித்த அர்னவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருந்தார். இருவரும் நண்பர்களாக பல வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதுபோல இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வருவது தான் எங்கள் வீட்டில் பிரச்சனை சண்டை வெடிக்கிறது என்று அர்னவ் மனைவி நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படியான நிலையில் அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் கலந்து கொண்ட போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாதது போல ஆரம்பத்தில் நடந்து கொண்டனர்.

வெளியே ரீல்ஸ்களில் இருவரும் அவ்வளவு நெருக்கம் காட்டுபவர்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதாக இருவரும் ஆதரவு தெரிவிக்காமல் விளையாடி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அன்ஷிதா பேட்டியில் பேசும்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு அர்னவை பார்க்கவே இல்லை, அதனால் அவரிடம் பேசவில்லை.

television bigg boss tamil 8 bigg boss 8

பிக் பாஸில் இருந்து வெளியே வந்து விஜய் சேதுபதி முன்பு பேசியதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுவரைக்கும் அர்னவ் இப்படி பேசுற ஆள் கிடையாது. நாம இப்போ வெளியே போக மாட்டோம் என்று நம்பிக்கையோடு அர்னவ் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

அதனால் அவர் வெளியேற்றம் என்று சொன்னதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அப்படி கோபப்பட்டு இருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருப்பதில் தீபக் அண்ணா வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். முத்துக்குமார் எனக்கு பிடிக்கும் அவர் வெற்றி பெற்றால் நல்லது என்று பலர் சொல்கிறார்கள்.

ஆனால் தீபக் அண்ணா உண்மையில் ஜென்டில்மேன். விளையாட்டை சரியாக விளையாடுகிறார். அவர் வெற்றி பெற்றால் நான் சந்தோஷப்படுவேன். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் உடைந்து போயிருந்த நேரத்தில் தீபக் அண்ணா எனக்கு பல இடங்களில் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதனால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் என்று அந்த பேட்டியில் அன்ஷிதா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+