Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் போவதற்கு முன்னாடியே பேசி முடிச்சிட்டோம்.. ரகசியங்களை உளறிய அருண்.. மாட்டிக்கொண்ட அர்ச்சனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அருண் பிரசாத் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அர்ச்சனா வீட்டில் வைத்து என்ன நடந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார்.

கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் தான் முடிவுக்கு வந்தது‌ கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்து பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு இன்னும் இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

vijay tv arun prasad vj archana

இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று யோசிக்க முடியாத வகையில் தான் ஆட்டம் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இவர் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் விளையாடி வந்த அருண் கடைசி சில வாரங்களில் தான ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

அதுவும் பிக் பாஸ் வீட்டிற்குள் யாருக்கு அடிபட்டாலும் முதல் ஆளாக உதவுவது அருண் தான். அதனாலேயே அவருக்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் அதிகரிக்க தொடங்கியது. அதுபோல அருணுக்கு தொடர்ச்சியாக அர்ச்சனா ஆதரவு தெரிவித்து சப்போர்ட் செய்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் விஜய் டிவி மற்றும் விஜய் சேதுபதி மீது கூட குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அர்ச்சனா பேசியது குறித்து அதிகமான விமர்சனங்களும் எழுந்து வந்தது. ஆனாலும் அர்ச்சனா அருணுக்கு சப்போர்ட் செய்து கொண்டே இருந்தார். அதுபோல ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும் போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் நான் இவர்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், இவங்க தான் என்னோட ஹார்லி குயின் என்று ரசிகர்களிடம் முதல் முறையாக தன்னுடைய காதல் ரகசியங்களை வெளிப்படையாக அருண் பேசியிருந்தார்.

அதற்கு பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் எப்போது இவர்களுடைய திருமணம் என்பதும் பலருடைய கேள்வியாக இருந்தது. இது குறித்து இப்போது இந்த ஜோடி பேட்டிகளில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதில் அருண் பேசுகையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி அர்ச்சனா வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவங்களுடைய அப்பா காலேஜுக்கு போயிட்டாங்க.

அம்மா மட்டும்தான் இருந்தாங்க. அவங்க அம்மாவிடம் நான் பிக்பாஸுக்கு போறேன், வர மூணு மாசம் ஆகும் என்று சொன்னேன். அப்போ அவங்க அப்படியா சந்தோசம் போயிட்டு வாங்க என்று சொன்னாங்க. அப்போது நான் போயிட்டு வந்து அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிறேன். எங்க வீட்டில் அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து உங்க கிட்ட பேச சொல்லுறேன் என்று சொன்னேன்.

இதைக் கேட்டு அர்ச்சனாவின் அம்மா ரொம்பவும் அதிர்ச்சியாகிட்டாங்க. பக்கத்தில் இருந்த அர்ச்சனாவும் இதை எதிர்பார்க்கல என்று அருண் சொல்கிறார். அதை தொடர்ந்து பேசிய அர்ச்சனா ஆமா இவர் நேரடியா வீட்டில் வந்து இப்படி பேசுவாருனு நான் நினைக்கவே இல்ல. திடீர்னு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று என் முன்னாடி வைத்து எங்க அம்மாவிடம் அருண் பேசும் போது எனக்கு நெஞ்சில் பட பட என்று ஏதோ சத்தம் கேட்டது.

ஒரு பதட்டத்தோடு தான் நான் இருந்தேன். பிறகு அருணை பற்றி ஏற்கனவே எங்க வீட்டில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் எங்களுக்கு ஓகே சொல்லிட்டாங்க. இப்போதைக்கு எங்களுக்கு சில கமிட்மெண்ட் இருக்கிறது. அதை முடித்ததும் எங்களுடைய திருமணம் குறித்து அப்டேட் சொல்றோம் என்று அந்த பேட்டியில் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த ரகசியங்களை அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் உடைத்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+