பிக் பாஸ் அருணுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சா? யார் இந்த சுபத்ரா? குவியும் கேள்விகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அருண் பிரசாந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சுபத்திரா அருண் என்பவர் அருண் பிரசாத் தன்னுடைய கணவர் என்பது போல அதிகமான பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார். இதனால் அர்ச்சனா இரண்டாவது மனைவியாக போகிறாரா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி பெரிய அளவில் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளில் தான் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டனர். பிறகு ஃப்ரீ டாஸ்க் பிறகு போட்டியாளர்களின் விளையாட்டு அப்படியே தலைகீழாக மாறி இருந்தது.

ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வாகி இருந்தார். அதுபோல முத்துக்குமரனோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கடைசியில் அண்ணன் தம்பி பாசத்தை காட்டியது அருண் பிரசாத் தான்.
அருண் பிரசாத் ஏற்கனவே விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான். அந்த சீரியலுக்கு பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய அடையாளத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்து இருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அர்ச்சனாவை தான் காதலிக்கிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய காதலை உலகமெல்லாம் அறியச் செய்திருந்தார். அதனோடு இந்த வருடத்திற்குள் எங்களுடைய திருமணம் நடைபெறும் என்று தங்களுடைய திருமண அப்டேட்டும் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் அருண் பிரசாத்துக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதா? என்ற கேள்விகள் இணையத்தில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் Subhadra. arun என்ற இன்ஸ்டாகிராம் ஐடி தான். அந்த ஐடியில் அருண் பிரசாத் வீடியோக்கள்தான் அதிகமாக இருக்கிறது. அதோடு அந்த ஐடியின் ப்ரொபைலில் என் அர்ஜுன் என்று நடிகர் அருணை டேக் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் ஐந்து வருட காதல், பாரதியின் கண்ணம்மா, பெஸ்ட் ஹீரோ 2021 என்றும், மை ஹப்பி, சிங்கக்குட்டி, பட்டுக்குட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார் சுபத்ரா. அதுபோல அருண் பிரசாத்தின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதில் அத்தை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஜோடியாக ஆரம்பத்தில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். அவர் சுபத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவிற்கும் சுபத்ரா தான் உங்களுடைய மனைவியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுபோல சுபத்திரா இருக்கும்போது அர்ச்சனாவை அருண் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவேளை சுபத்திரா அருணின் தீவிர ரசிகையா? அதனால் தான் அருணை கணவர் என்று அழைக்கிறாரா? அல்லது அருணின் முதல் மனைவியா என்றெல்லாம் பல கேள்விகள் கமெண்ட்களில் இருக்கிறது. இதற்கு அருண் பிரசாத் அல்லது அர்ச்சனா விரைவில் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அருண் பிரசாத்தின் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications