பிக் பாஸ் 8: இத்தனை சின்னத்திரை பிரபலங்களா? லீக்கான லிஸ்ட்.. பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காதே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அதிகமாக சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக இருக்கிறது. யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் தொடங்கி வந்தாலும் அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்கள் முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக விஜய் டிவியில் சில வருடங்களாகவே பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிவடைந்ததும் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
அந்த நேரத்தில் தான் பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் தான் இந்த சீசனில் ரெஸ்ட் எடுக்க போகிறேன்... இந்த சீசனை நான் தொகுத்து வழங்கவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது ஒரு தரப்பினர் சரி என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் கமல்ஹாசன் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்று கூறி வருகிறார்கள்.

இந்த பஞ்சாயத்தே பெரும் பஞ்சாயத்தாக இருக்கும் நிலையில் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக யார் தொகுப்பாளராக அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆரம்பத்தில் சிம்பு இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சிம்பு சில திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தேர்வாகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அவரும் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் போட்டியாளர்கள் ஆடிஷனும் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்ற உத்தேச பட்டியல் இப்போது வெளியாகி இருக்கிறது.
அதில் அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் அது பற்றி பார்க்கலாம். முதலிடத்தில் டிடிஎஃப் வாசனும் அவரைத் தொடர்ந்து அவருடைய காதலியான ஜோயா என இரண்டு பேரும் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் குரோஸி, மாகாபா, ஜெகன், ரஞ்சித், பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமான நடிகர் அருண் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
அதுபோல தற்போது ஹேமா அறிக்கை வெளியான பிறகு அதிகமான பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரியாஸ்கான் பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித் போன்றோர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களோடு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்களில் ஒரு சிலரும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications