பிக் பாஸ் 8: கடைசியில் கூட அப்படி பேசிட்டு போன சுனிதா.. ஆனால் இத்தனை லட்சம் சம்பளமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளராக சுனிதா நேற்றைய தினம் வெளியேறி இருந்தார். இவர் இந்த வீட்டில் இருந்த 35 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் கலந்து கொண்டனர். இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆக அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருந்தார். அவர் வெளியேறிய போது என்னை தொடர்ந்து சுனிதா, ஆனந்தி என எல்லோரும் வருவீங்க என்று சொல்லி இருந்தார். ஆனால் நான்காவது வாரத்தில் தீபாவளி வாரம் என்பதால் நோ எலிமினேஷன் என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்த ஐந்தாவது வாரமான நேற்றைய நாளில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. காரணம் இந்த முறை 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது அதிக போட்டியாளர்கள் உருவாகி விட்டனர்.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இருக்கும் நிலையில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்தால்தான் சரியாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அது போல வாக்குகளின் அடிப்படையில் சாச்சிகா, ஆனந்தி, சுனிதா மூன்று போட்டியாளர்களும் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார்கள்.
ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனிதா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். சுனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பாசிட்டிவ் பெற்று இருக்கிறாரோ அதைவிட கொஞ்சம் அதிகமான நெகட்டிவ் தான் பெற்றிருந்தார். இவருக்கும் சாச்சிகாவோடு ஏற்பட்ட சண்டை அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதுபோல சௌந்தர்யா மற்றும் சுனிதா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சுனிதா நடவடிக்கை அதிகமாக விமர்சிக்கப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முழுமையாக என்டர்டைமென்ட் செய்து கொண்டிருந்த சுனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இந்த சீசனில் எல்லா போட்டியாளர்களும் வெளியேறும் போது விஜய் சேதுபதி முன்பு வந்ததும் உள்ளிருக்கும் போட்டியாளர்களை கிழித்து தொங்க விட்டனர்.
அதுவரைக்கும் சக போட்டியாளர்கள் மீது இருந்த கோபத்தை எல்லாம் விஜய் சேதுபதி முன்பு மேடையில் நின்று கொண்டு கொட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் நேற்று சுனிதா மிகவும் பாசிட்டிவாக பேசியிருந்தார். இதற்கு முக்கிய காரணம் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி கொடுத்த அட்வைஸா என்பது கேள்வியாக குறியாக இருந்தாலும் நேற்று சுனிதா நடந்து கொண்ட விதம் பார்க்கும் ரசிகர்களை பாராட்ட வைத்தது.
இந்த நிலையில் சுனிதா இந்த நிகழ்ச்சியில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் 35 நாட்கள் இருந்ததற்கு 7 முதல் 8 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் டேக்ஸ் எல்லாம் போக இன்னும் சில நாட்கள் கழித்து தான் இவருக்கு சம்பளம் பணம் கையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications