Bigg Boss 8: பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் இந்தியன் 2 காமெடியனும் என்ட்ரி.. லீக்கான அடுத்த லிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. ரஞ்சித் சமீபத்தில் தான் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அதுபோல இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் பெரும் பரபரப்பாக அந்த நிகழ்ச்சி பற்றி பேசப்படுகிறது. அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் பரபரப்பாக பேச வைக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி குழுவினர்கள் பல வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தாலும் எட்டாவது சீசன் தொடங்கப்படும் போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார். இப்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக கமிட்டாகி இருக்கிறார். விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறார் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நேரத்தில் போட்டியாளர்களும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால்தான் இந்த நிகழ்ச்சி பற்றி அதிகமாக பேசப்படும்.
அதனாலேயே இந்த சீசனில் சமூக வலைத்தளம் மற்றும் மக்களுக்கு அதிகமான தெரிந்த முகங்களாக இருக்கும் போட்டியாளர்களை களம் இறங்குவதாக கூறப்படுகிறது. சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் இந்த சீசனில் அதிகமாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்த அருண் மற்றும் வில்லியாக நடித்த ஃபரீனா கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
அவர்களை தொடர்ந்து சீரியல் நடிகர் அர்னாவ் மற்றும் அக்ஷிதா, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்த வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான ஜோயா மற்றும் டிடிஎஃப் வாசன் என பல பிரபலங்கள் ஜோடியாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களோடு சர்ச்சை நாயகன் ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அது வேறு யாருமில்லை நடிகர் ரஞ்சித் தான். நடிகர் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகமான திரைப்படங்களில் காதலுக்கு எதிரானவராகவே நடித்து இருக்கிறார். அதிலும் அவர் சமீபத்தில் நடித்து இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடக காதலுக்கு எதிராக ரஞ்சித் பேசி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்காது என்று இவரையும் இந்த நிகழ்ச்சியில் களம் இறக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவாக நடிக்கும் அக்ஷிதா கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது அதே சீரியலில் பழனிச்சாமியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித்தும் கலந்து கொண்டார் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போகும். ரஞ்சித் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தாலும் இப்போது சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பிக் பாஸ் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவருக்கு இருக்கும் நெகட்டிவ் இமேஜ் மாறுமா அல்லது அதிகரிக்குமா என்று பார்க்கலாம். அதுபோல நடிகர் மற்றும் தொகுப்பாளரான ஜெகன் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெகன் அயன் திரைப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார்.
அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய நடிப்பிற்கு சரியான அடித்தளம் கிடைக்காமல் இருக்கிறது சமீபத்தில் கூட இந்தியன் 2 திரைப்படத்தில் காமெடியான கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் அந்த திரைப்படம் வெற்றி பெறாததால் இவருடைய கேரக்டர் பேசப்படவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சீசன்களாக முயற்சி செய்து வருவதாகவும் இந்த சீசனின் அவரும் இருக்க போகிறார் என்றும் புறப்படுகிறது.

நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க உங்க கமெண்ட் தட்டி விடுங்க.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications