பிக் பாஸ் 8 போட்டியாளர்களுக்கு வந்த இக்கட்டான சூழ்நிலை! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது! ஐயோ பாவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் சௌந்தர்யா செய்த சமையலை சாப்பிட்டு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் கதறி போய் இருக்கிறார்கள். அதோடு அவர் செய்த செயலை பார்த்து வெளியே இருக்கும் ரசிகர்களும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
டாடி லிட்டில் பிரின்சஸ் என்று கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதை இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா நிரூபித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சௌந்தர்யா குழந்தைத்தனமாக சில நேரங்களில் செய்வார், வில்லிப்போல சில நேரங்களில் செய்வார்கள். இவர் எப்போ எப்படி இருப்பார் என்று யாராலும் யூகிக்க முடியாத வகையில் தான் இவருடைய விளையாட்டு இருந்து வருகிறது.

ஆனால் இன்று இவர் செய்த செயல் உள்ளிருந்த மற்ற எல்லா போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்த வாரத்தில் தலைவர் யாரும் கிடையாது என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் இந்த வாரத்தில் யார் என்ன செய்யப் போகிறார்கள் என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா சமைக்கவே இல்லை என்று ரசிகர்கள் சொன்னதால் சௌந்தர்யா தான் இன்று சமைக்க வேண்டும் என்று பிக் பாஸ் அவருக்கு டாஸ்க் கொடுத்து இருந்தார். அதனால் சௌந்தர்யா இன்று சமைக்கிறேன் என்று ஒரு விபரீத விளையாட்டு விளையாடி இருக்கிறார்.
புளி குழம்பு வைத்திருக்கிறார். அந்த புளிக்குழம்பு சௌந்தர்யா போட்ட மசாலா பொருட்கள் பார்ப்பவர்களே பதற செய்திருக்கிறது. அதை சாப்பிட்டவர்களின் நிலைமை இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்பது போலத்தான் இருக்கிறது. இன்று சாதம் குலைந்து போய் இருக்கிறது. ஆனால் சௌந்தர்யா வைத்த புளிக் குழம்பு பார்த்ததுமே முத்துக்குமரன் கண்கலங்கி இருக்கிறார்.
அதாவது அந்த புளிக்குழம்புக்கு சௌந்தர்யா 12 தக்காளி, நிறைய புளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், ஏலக்காய், கிராம்பு, வெண்ணெய், நெய் எல்லாத்தையும் போட்டு புளிக்குழம்பு வைத்திருக்கிறார். அதோடு இதில் ரசப்பொடி, சாம்பார் பொடி, சர்க்கரையும் கொட்டி இருக்கிறார். இதையெல்லாம் கலந்து இவர் செய்த புளிக் குழம்பை தான் இன்று உள்ளிருந்த எல்லா போட்டியாளர்களும் சாப்பிட்டார்கள்.
இந்த கஷ்டமான குழம்பை ஊற்றி சாப்பிட்ட முத்துக்குமரன் புளிக்குழம்புக்கு பட்டர் போட்டியா...மா? என்று கேட்க, ஆமாம் கொஞ்சம் தான் போட்டேன். இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கணுமோ..? என்று வெள்ளந்தியாக சௌந்தர்யா கேட்கிறார். அதோடு இஞ்சி, பூண்டு இன்னும் கொஞ்சம் சேர்த்து இருந்தால் வாசனை சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன் என்று சௌந்தர்யா சொன்ன வார்த்தையால் மொத்த பிக்பாஸ் வீடும் அதிர்ச்சியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications