பிக் பாஸ் 8: போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் லிஸ்ட்.. ஹைலைட் ரவீந்தர்.. குறைவு இவருக்கு தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 18 போட்டியாளர்களில் அதிகபட்சமாக ரவீந்தர் மற்றும் ரஞ்சித் சம்பளம் வாங்கும் நிலையில் யார் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள்? அவர்களின் விவரம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் முயற்சி செய்கிறார்கள். சாதாரண பொது மக்கள் கூட இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் இருக்கிறது.

ஆனாலும் கடந்த சீசன்களில் கூட மக்களின் பிரதிநிதியாக போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த சீசனில் முழுக்க முழுக்க விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்வது போலவே நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான். அதே நேரத்தில் விஜய் டிவி பிரபலங்கள் என்பதால் இவர்களுக்கும் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்றல்ல.
கடந்த சில சீசன்களாகவே ஜாக்குலின் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளாமலே இருந்தார். அது பற்றி இந்த சீசனில் தான் தெரிய வந்திருக்கிறது. அதாவது மூன்று சீசன்களாக ஜாக்குலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது, போராடி தான் இந்த சீசனில் தான் கலந்து கொண்டேன் என்று அவர் சொல்லி இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எல்லோரும் பிரபலமாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் இதில் எத்தனை பேர் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்து பிரபலமாக இருக்கிறார்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் போட்டியாளர்கள் பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். ஒரு சிலர் டைட்டில் ஜெயித்தால் கூட இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.
ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் மோகம் பல பிரபலங்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 100 நாட்கள் மக்கள் மத்தியில் நம்மைப் பற்றி பரபரப்பாக பேசுவார்கள் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு சர்ச்சைகள், வதந்திகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பலர் பங்கு பெறுகிறார்கள். பிரபலம் பெற வேண்டும் என்பது ஒரு சிலருடைய எண்ணமாக இருந்தாலும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வருமானமும் அதிகமாக கிடைக்கிறது என்பது உண்மைதான்.
இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விவரம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம். இதில் இந்த சீசனில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி 15 முதல் 18 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் அவருக்கு குறைந்தபட்சம் 15 எபிசோடுகள் மட்டும்தான் ஷூட்டிங் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து போட்டியாளர்களில் விவரம்,
முத்துக்குமார் - 10 ஆயிரம்
தர்ஷிகா - 25 ஆயிரம்
வி ஜே விஷால் - 25 ஆயிரம்
அன்ஷிதா - 25 ஆயிரம்
ஆர் ஜே ஆனந்தி - 25 ஆயிரம்
பவித்ரா ஜனனி - 25 ஆயிரம்
சத்யா - 25 ஆயிரம்
அர்னாவ்- 25 ஆயிரம்
சாச்சனா - 30 ஆயிரம்
சௌந்தர்யா நஞ்சுண்டன் - 10 ஆயிரம்
ஜெஃப்ரி - 10 ஆயிரம்
தர்ஷா குப்தா - 25 ஆயிரம்
தீபக் - 30 ஆயிரம்
ஜாக்குலின் - 25 ஆயிரம்
சுனிதா - 25 ஆயிரம்
ரவீந்தர் சந்திரசேகர் - 50 ஆயிரம்
ரஞ்சித்- 50 ஆயிரம்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications