பிக் பாஸ் 8: இது உங்க அப்பா வீடா? பெண் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம்.. கைகலப்பு வந்தாச்சு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில டாஸ்க்குகள் ஒவ்வொரு சீசனிலும் சம்பிரதாயம் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க்கும் ஒன்று. இந்த டாஸ்க் நடக்கும் போதெல்லாம் பல சம்பவங்கள் நடைபெறும். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் இந்த டாஸ்க்கை ஒவ்வொரு சீசனிலும் மறக்காமல் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீசனிலும் அந்த டாஸ்க் வந்துவிட்டது.

ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபத்திற்கு ஆளானாலோ, இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட் சிம்பலை கழற்றி கொடுத்து விட வேண்டும் என்பது ரூல்ஸ் ஆக இருக்கிறது. பிறகு அவர்கள் டெவில்ஸ் அணியுடன் சேர்ந்து விடுவார்கள். அதுபோல அதிகமான ஹார்ட் பெறுபவர்கள் இந்த வாரம் நாமினேசன் பிரி டாஸ்க்கை பெற போகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு தானே ஒவ்வொரு வாரமும் சிலர் உள்ளே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தால் எப்படி விளையாடுவார்கள் என்று யூகிக்கவே முடியாது. எப்படியாவது எதிர் தரப்பில் இருப்பவர்களை கோபப்படுத்தி அவர்களில் ஹார்ட்டை பெற்று விட வேண்டும் என்று டெவில்ஸாக இருப்பவர்கள் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே இவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இதற்கு முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியை நன்றாக பார்த்து விட்டு வந்த இந்த சீசன் போட்டியாளர்கள் சும்மாவே எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கே உரிய டாஸ்க் வந்திருக்கும் நிலையில் இதை வைத்து தங்களுடைய வன்மத்தை தீர்த்துவிடலாம் என்று பலர் கோல் போடுகிறார்கள்.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே வாய்க்கால் வரப்பு பிரச்சனை போல ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இன்று நடந்த பிரச்சனை என்னவென்று ப்ரோமோவில் காட்டவில்லை. ஆனால் ஜாக்லின் சீ போ என்று சொல்ல, அதற்கு தர்ஷிகா என்னை பார்த்து அப்படி சொல்லாத.. உன் இஷ்டத்துக்கு பேசுறதுக்கு இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது என்று சொல்கிறார்.
ஜாக்குலினுக்கு ஒன்னு என்றால் ஓடிவரும் சௌந்தர்யா யாரை கேட்டு அப்பா வீடுனு சொல்லுற? என்று சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார். நீ எப்படி அவங்க அப்பாவை பத்தி பேசலாம் என்று சௌந்தர்யா கேட்க, அதற்கு அசராத தர்ஷிகா நான் அப்படித்தான் பேசுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் சண்டை வந்து சௌந்தர்யா தர்ஷிகாவை அடிக்க போகிறார். அப்போது அங்கு இருக்கும் போட்டியாளர்கள் வந்து தடுக்கிறார்கள். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications