ரசிகர்களை கதற வைத்து எவிக்ஷனான தீபக்.. குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! மனைவி எமோஷனல் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷனான தீபக்கிற்கு அவருடைய வீட்டில் பிரமாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு அவருடைய மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி நடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அவர் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மற்றும் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில் அருண் மற்றும் தீபக் வெளியேற்றப்பட்டனர். இது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தீபக் இங்கே சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் திடீர் எவிக்ஷன் காரணமாக சமூக வலைதளத்தில் பலர் தீபத்திற்கு அன்ஃபேர் எவிக்ஷசன் நடந்து விட்டது என்று கருத்து கூறி வருகிறார்கள்.

அதுபோல இதுவரைக்கும் யாருக்கும் நடக்காத பல நிகழ்வுகள் தீபக்கிற்க்கு எடுக்க நடந்தது. அதாவது தீபக் வெளியேறும் போது பிக் பாஸ், இதுவரைக்கும் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த கேப்டனும் செய்யாத செயல்களை நீங்கள் செய்தீர்கள் அதனால் இந்த மொத்த பிக்பாஸ் சிறந்த கேப்டன் நீங்கதான் என்று இவருக்கு தலையில் கிரீடம் வைத்து பாராட்டி இருந்தார்.

இது இதுவரைக்கும் எந்த பிக் பாஸ் போட்டியாளருக்கும் கிடைக்காத கௌரவம். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தீபக்கிற்க்கு குடும்பத்தினர் பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அதுபோல அவருடைய சின்னத்திரை நண்பர்களான நடிகர் சஞ்சீவ் உட்பட சிலர் அவருடைய வீட்டிற்கு வந்து தீபக்கை வரவேற்று இருக்கிறார்கள்.

அப்போது எடுத்த வீடியோவை தீபத்தின் மனைவி சிவரஞ்சனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், “தீபக் கோப்பையை வெல்லவில்லை... ஆனால் அவர் பல இதயங்களை வென்றிருக்கிறார். மேலும் நாங்கள் அனைவரும் அவரைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் பெருமைப்படுகிறோம். அவரை எங்கள் நல் அன்புடன் வரவேற்கிறோம். சரியாக 100 நாட்களுக்கு பிறகு எங்களின் முதல் வீடியோ.. ரசியுங்கள் மச்சி.. கடவுள் அருள் என்று பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+