பிக் பாஸ்க்குள் விஜய்யா? புது ட்விஸ்ட்.. விஜய் சேதுபதிக்கு போட்டியாக இவ்வளவு பேரா? லீக்கான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கு முன்பு முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்ற நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அதில் நடிகர் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருக்கிறது. அதை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் நேரடியாக கேட்கும் வகையில் கடந்த வாரத்தில் ஒரு நிகழ்ச்சி சூட்டிங் செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கடந்த ஏழாவது சீசன் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக கலந்து கொள்ளும் நிலையில் அவர்களிடம் பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மாகாபா மற்றும் குரோஷி தொகுத்த வழங்கி இருக்கிறார்கள்.
அதில் மாகாபா ரசிகர்களிடம் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பல்வேறு ரசிகர்கள் பலருடைய பெயரை சொல்லி இருக்கிறார்கள். ஒரு ரசிகர் மதன் கௌரி வர வேண்டும் என்று சொல்கிறார். இன்னொரு ரசிகர் விஜய் டிவி டிஜே பிளாக் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல இன்னொருவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் வரவேண்டும் அவர் சீரியலில் எதார்த்தமாக இருக்கிறார், அவருடைய நிஜ கேரக்டர் எப்படி இருக்கும் என்பது இந்த நிகழ்ச்சி மூலமாக நாங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படியாக பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் நான் நடிகர் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தன்னுடைய ஆசையை சொல்லி இருக்கிறார்.
அதைக் கேட்டு தொகுப்பாளர்கள் மட்டுமல்லாமல் பழைய போட்டியாளர்களும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். ஏன் இந்த ஆசை என்று அந்த பெண்ணிடம் கேட்க ஏற்கனவே விஜய் தான் சினிமாவை விட்டு விலகப் போறேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியை 100 நாட்கள் இருந்தால் அவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு மாகாபா ஏன் அவரையும் இவர் இப்படி செய்திருக்கலாமே? அந்த இடத்தில் விஜய் அப்படி பேசி இருக்கலாமே? என்று ரிவ்யூ சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த ஜாலியான ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications