பிக் பாஸ் 8: இந்த வாரம் குறும்படம் இருக்கு! அருணுக்கு ஆப்பு உறுதி.. உடைபடுமா உண்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வரம் குறும்படம் போட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அருண் மஞ்சரியிடம் நான் "ப்ரொஜெக்ஷ்ன்" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் பேசிய கிளிப்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறும்படத்திற்கு ஏகபோக வரவேற்பு உண்டு. முதல் சீசனில் ஜூலிக்காக குறும்படம் போடப்பட்டது. அது இப்ப வரைக்கும் பேசப்படுகிறது. அதற்கு பிறகு எத்தனையோ குறும்படங்கள் வந்தாலும் ஜூலிக்கு போட்டது போல எப்போதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இருக்கிற மாதிரி அப்போது 24 மணி நேர லைவ் கிடையாது என்பதால் ஜூலி தான் பேசியதை பேசவில்லை என்று சக போட்டியாளர்களிடம் சொல்லி இருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஜூலி சொல்வது உண்மை என்று எல்லா போட்டியாளர்களும் அவருக்கு சப்போர்ட் செய்தனர். ஆனால் ஓவியா ஜூலி தன்னிடம் சக போட்டியாளர்கள் பற்றி சொன்னார் என்று அடித்து கூறி இருந்தார். பிறகு கமல்ஹாசன் குறும்படம் போட்டு ஜூலி பற்றிய ரகசியங்களை அவிழ்த்து விட ஜூலியை இப்ப வரைக்கும் பலர் திட்டி வருகிறார்கள்.

அதேபோல இந்த சீசனிலும் சில சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதற்காக குறும்படம் இந்த வாரம் போட்டால் செமையாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஏற்கனவே இந்த சீசனில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்று அல்லது நாளை குறும்படம் போட்டால் இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரிக்கும் அருண் மற்றும் மஞ்சரி இடையே இந்த வாரத்தில் பெரிய சண்டை ஏற்பட்டது.

அப்போது அருண் மஞ்சரியிடம் நீங்க என்ன ப்ரொஜெக்ட் பண்றீங்க என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பிறகு நான் அந்த வார்த்தை சொல்லவே இல்லை மஞ்சரி தான் என்னை பார்த்து சொன்னார், இந்த வீட்டிற்குள் மஞ்சரியும் முத்துவும் இப்படித்தான் சொல்லாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரிய குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

ஆனால் இணையத்தில் மஞ்சரியிடம் அருண் முதலில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் இது பற்றி விஜய் சேதுபதி விசாரித்தால் சிறப்பாக இருக்கும். அதுபோல பொம்மை டாஸ்க்கில் ஜெஃப்ரியை ராணவ் இறுக்கிப் பிடித்து இருப்பார். அப்போது ராணவ் பிடித்தது எனக்கு ரொம்ப வலித்தது அப்போ நான் கை முட்டியை வைத்து இப்படி இடித்து இருந்தால் என்ன பண்ணி இருப்ப என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் தற்போது வெளியான வீடியோ கிளிப்ஸ்களில் ராணவ் ஜெஃப்ரியை பிடிக்கும் போது ஜெஃப்ரி ராணவ் முகத்தில் கை முட்டியை வைத்து வேகமாக இடிக்கறார். அப்போது ராணவிற்கு அடிபட்டு இருக்கிறது. ஆனால் அதை அவர் வெளியே சொல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்தி இருக்கிறார். அதுபோல பொம்மை டாஸ்கில் மற்றொரு இடத்தில் ராணவை ரயான் அடிக்கப் போயிருந்தார்.

அதற்கு ரயான் பலூன்கள் போட்டிருந்த தொட்டிக்குள் முதலில் ராணவ் தான் விழுந்தான் அதற்குப் பிறகுதான் நான் வந்தேன். என்று சொல்லி இருந்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் ராணவை முதலில் இடித்து உள்ளே தள்ளுவது ரயன் தான். அதிலிருந்து தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ரயான் அதை மறைத்து ராணவ் தான் உள்ளே சென்றார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ கிளிப்சுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மூன்று சம்பவங்களையும் மையப்படுத்தி குறும்படம் வந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் பிக் பாஸ் அணியினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+