பிக் பாஸ் 8: கடைசியில் ட்விஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போவது இந்த போட்டியாளரா? காரணம் இதுதானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஐந்தாவது வார எலிமினேஷனாகி யார் வெளியேற போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் எந்த போட்டியாளர் கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக அர்னாவ், தர்ஷா குப்தா என்று மூன்று பேர் வெளியேறி இருந்தனர்.

கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டு இருந்தார். 16 போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொண்டு வந்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைக்க சேனல் தரப்பில் பிளான் போட்டனர். கடந்த மூன்றாம் தேதி 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக அனுப்பப்பட்டனர்.
அவர்கள் கண்டன்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் அவர்களும் கண்டன்ட் கொடுக்காமல் எல்லோரும் பிராங்க் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் தப்பித்திருந்த நிலையில் இந்த வாரம் அவர்கள் நாமினேஷனில் சிக்கி இருந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர்களில் ரயான் தவிர மற்ற ஐந்து பேருமே எலிமினேஷனிற்கான நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். ஆரம்பத்தில் இந்த வாரத்தில் ராணவ் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அவர் பெரிய அளவில் எந்த பர்பாமன்ஸும் செய்யவில்லை ஆனால் நாமினேஷனில் அவருடைய பெயர் வந்ததும் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் அந்நியனாக மாறிவிட்டார்.
அதனால் சௌந்தர்யாவுக்கு அடுத்தபடியாக இவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் இவரை ஒதுக்கி தள்ளியது மக்கள் மத்தியில் இவருக்கு அனுதாபம் கிடைத்துவிட்டது. இந்த நிலையில் இவரை தவிர வர்ஷினி, மஞ்சரி, ரியா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்தனர். இவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ரியா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதற்கு காரணம் ரியா பெரிய அளவில் கண்டண்ட் கொடுக்கவில்லை. எதற்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக் கொள்கிறேன் என்று சொல்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அவரால் நிகழ்ச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். அதனால் அவருக்கு வாக்குகள் சரிந்து இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications