பிக் பாஸ் 8: விடியற்காலை 4 மணி வரை நடந்த சூட்டிங்.. கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் விவரங்கள்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்குரிய சூட்டிங் நேற்று இரவு தொடங்கி இன்று காலை நான்கு மணி வரைக்கும் நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது அதை பார்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனிலும் உத்தேச பட்டியலில் பலருடைய பெயர் இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சி இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கி 11 மணி வரைக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான சூட்டிங் நேற்று மாலையே தொடங்கி இன்று (அக்டோபர் 6) விடியற்காலை 4 மணி வரைக்கும் நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதை பார்க்கலாம்.


1, தயாரிப்பாளர் ரவீந்தர்: முதல் போட்டியாளராக ரவீந்தர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ரவீந்தர் தயாரிப்பாளராகவும் பலருக்கும் பரீட்சையமாகி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சீசனிலும் ரிவ்யூ செய்து வருகிறார். அதோடு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் கணவர்தான். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இவர்தான் இந்த சீசனின் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

2, அர்னாவ்: விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடித்த அர்னாவ் அவருடைய மனைவியோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் பலருக்கும் பரிட்சயமானவர். அவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

3, அக்ஷிதா: விஜய் டிவியில் செல்லம்மா சீரியல் கதாநாயகியாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட அக்ஷிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

4, சஞ்சனா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த சஞ்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

5, தர்ஷா குப்தா: சீரியல்களில் நடித்து இப்போது சினிமாக்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா கடந்த சீசனில் கலந்து கொள்வார் என்று பெயர் அடிபட்ட நிலையில் இப்போது இவரும் கலந்து கொள்கிறார்.

6, சத்யா: பிக் பாஸ் பிரபலமான ரம்யாவின் கணவரான சத்யா ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் பனிவிழும் மலர்வணம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

7, தீபக்: விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தமிழும் சரஸ்வதியும் என்று சீரியலில் கதாநாயகனாக நடித்த தீபக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது அவர் அதை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

8, சுனிதா: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டு வந்த சுனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

9, கானா ஜெப்ரி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு கானா பாடகர் கலந்து கொள்வார். அந்த வரிசையில் கானா ஜெப்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

10, ஆர் ஜே ஆனந்தி: ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி பிறகு கோமாளி படத்தில் நடிகர் யோகி பாபுவிற்கு மனைவியாக நடித்து பிரபலமான ஆர்.ஜே ஆனந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருக்கிறார்.

11, ரஞ்சித்: நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலிலும் பழனிச்சாமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். காதல் திருமணங்களை எதிர்த்து பேசி வரும் இவருடைய பேச்சு இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இவரும் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

12, பவித்ரா ஜனனி: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

13, தர்ஷிகா: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த ஜோடி ஆர் யூ ரெடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து அசத்திய தர்ஷிகா பிக்பாஸ் போட்டியாளராக மாறி இருக்கிறார்.

14, வி.ஜே விஷால்: விஜே விஷால் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவரும் இந்த பிக் பாஸ் 8இல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

15, முத்துக்குமார்: youtube சேனல்களில் தொகுப்பாளராகவும் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முத்துகுமார் பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கிறார். இவர் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழை பற்றி பேசி பலருடைய மனதை கவர்ந்தார்.

16, ஜாக்லின்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சீசன்களில் ஜாக்லின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அவர் இந்த எட்டாவது சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார்.

17, சௌந்தர்யா நஞ்சுண்டான்: ஆதித்ய வர்மா, தர்பார் போன்ற பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த சௌந்தர்யா பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளரான விஷ்ணுவின் காதலி என்றும் சொல்லப்படுகிறது.

18, அருண் பிரசாத்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.













Click it and Unblock the Notifications