பிக் பாஸ் 8: இந்த சீசனில் தேர்வான முதல் போட்டியாளர் இந்த நடிகரா? அதுவும் அந்த பிரபலம் தான் சிபாரிசா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று இருப்பதாகவும் அதில் முதல் போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த முதல் போட்டியாளர் யார் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் போட்டியாளரை யார் ரெகமெண்ட் செய்தார் என்பது பற்றியும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன் முடிவடைந்ததும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படுவதும் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதுமாக இருந்து வருகிறது.

Vijay TV Bigg Boss Entertainment

இந்த நிலையில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 முடிவடைய இருக்கும் நிலையில் பிக் பாஸ் எட்டாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய பஞ்சாயத்து வந்துவிட்டது. அதாவது இதுவரைக்கும் ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் திடீரென்று இந்த சீசனில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக யார் வரப்போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. நமக்கு தெரிந்த வட்டாரத்தில் விசாரிக்கையில் விஜய் சேதுபதி வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் சிம்பு இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்ததில் சிம்பு சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதே நேரத்தில் நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த வேலைகளிலும் சேனல் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். அதாவது போட்டியாளர்கள் தேர்வு செய்வதில் அவசரம் காட்டி வருகிறார்கள்.

Vijay TV Bigg Boss Entertainment

இந்த நிலையில் முதல் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அது வேறு யாருமில்லை விஜய் டிவி பிரபலம் தான். ஏற்கனவே எல்லா சீசன்களில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக இருக்கும் நிலையில் இந்த முறையும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாத் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இவருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வான அர்ச்சனாவிற்கும் காதல் இருக்கிறது என்று கிசுகிசுப்பு எழுந்து வரும் நிலையில் அர்ச்சனா ரெக்கமண்ட் செய்ததால் தான் அருணுக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அருண் மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நடித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்து சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர் புதியதாக எந்த திரைப்படத்திலோ அல்லது சீரியலிலோ கமிட் ஆகாமல் இருக்கிறார். அதனால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முயற்சி செய்ததாகவும் இப்போது அவர் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+