பிக் பாஸில் எவிக்ஷனான போட்டியாளர் என்னை பத்தி தப்பா பேசினாங்க.. ராணவை தாக்கிய விஜய் சேதுபதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் விஜய் சேதுபதி பேசும்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள் வெளியே சென்று என்னை பற்றி தப்பாக பேசினார்கள் என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதோடு ராணவ் பேசும்போது அவரை பாதியிலேயே பேசவிடாமல் தடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் விஜய் சேதுபதி முன்னாள் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முன்னாள் போட்டியாளர்கள் இரண்டு பேராக நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள்.

முன்னாள் போட்டியாளர்கள் இந்த சீசனில் பேசிய ட்ரெண்டான வார்த்தைகள் அவர்களுக்கு வெல்கம் பாடலாக போடப்பட்டது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஜாக்குலினை வரவேற்று பேசினார். அவருக்காக ஸ்பெஷல் ஏவி வழங்கப்பட்டது. பிறகு விஜய் சேதுபதி ஜாக்குலினை பாராட்டி பேசி இருந்தார்.
அடுத்ததாக முன்னாள் போட்டியாளர்களிடம் பேசும் போது ஆர்ஜே ஆனந்தியிடம் இந்த நிகழ்ச்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, ஆர்ஜே ஆனந்தி தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஜய் சேதுபதி எனக்கும் இந்த நிகழ்ச்சி மூலமாக பல மாற்றம் நடைபெற்று இருக்கிறது.
நான் எந்த விஷயமாக இருந்தாலும் அதை தலையில் ஏற்றுக்கொள்ள கூடாது என்று நினைக்கிறவன். ஆனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கிய பிறகு எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற சில போட்டியாளர்கள் என்னைப் பற்றி நெகட்டிவாக பேசியிருந்தார்கள்.
சில போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் என்னை ட்ரோல் செய்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் திரும்ப என் காம்பவுண்டுக்குள் இனி வரும் போது அவர்களை பார்த்துக்கொள்கிறேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகுதான் எனக்கே புரிந்தது. நாம் இப்படி யோசித்து கொண்டு இருப்பது தவறு என்று அதோடு இப்படி யாரையும் பழிவாங்க வேண்டும் என்று யோசிப்பதால் எந்த பலனும் கிடையாது என்றும் புரிந்து கொண்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அடுத்ததாக ராணவிடம் நீங்க இந்த பிக்பாஸ் பற்றி பேசுங்க என்று சொல்ல, ராணவ் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகும்போது நான் ரொம்பவும் பயந்து கொண்டே வந்தேன். பிறகு என்னுடைய பயத்தை வெளியே காட்டாமலேயே நான் விளையாடினேன். இந்த விளையாட்டில் பல மாற்றங்கள் எனக்குள் இருந்தது.
நீங்கள் தொகுத்து வழங்குவது பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, இதுவெல்லாம் போய் இதை நம்பாதீங்க. ஒரு சிறிய இடைவெளி விடலாம் என்று ராணவ் பேசிக் கொண்டு இருக்கும்போது பாதியிலேயே விஜய் சேதுபதி போயிருக்கிறார்.
ராணவ் எவிக்ஷன் நடைபெறும் போது அவருடைய ரசிகர்கள் பலர் இது அன்பர் எவிக்ஷன் என்று கூறி வந்தனர். அதோடு விஜய் சேதுபதிக்கு ராணவ் மீது ஆரம்பத்தில் இருந்தே கோபம் ஜெஃப்ரிக்கு ஆதரவாக செயல்படுகிறார். ராணவ் மற்றும் ஜெஃப்ரிக்கு பிரச்சனை ஏற்படும் போது விஜய் சேதுபதி ஜெஃப்ரியை கண்டிக்கவில்லை என்று ராணவின் தந்தை பேட்டி ஒன்றில் பேசியிருந்ததை வைத்து இப்போது விஜய் சேதுபதி இதுபோல நடந்து கொள்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications