பிக் பாஸ் 8: இந்த முறை பாய்ஸ் vs கேர்ள்ஸ் ட்விஸ்ட்! தொடங்கியது கொண்டாட்டம்.. ஆனால் ஆரம்பமே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி அன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை போல இல்லாமல் வித்தியாசமாக பல ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது. அதாவது இந்த முறை பாய்ஸ் vs கேர்ள்ஸ் ரூம்கள் தனியாக அமைக்கப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்கான ஷூட்டிங் நேற்று மாலை முதல் தொடங்கிவிட்டது. மற்ற சீசன்களை போல இலலாமல் இந்த சீசன் சுவாரசியமாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் கவனத்தை பெற முடியும். காரணம் இதுவரைக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த சீசனில் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் மாயா மற்றும் பூர்ணிமா குரூப்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். பிரதீப்புடைய வெளியேற்றம் கூட தவறு என்று பலரும் கூறி வந்தனர். அதுபோல இந்த சீசனில் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார் இதனால் அடுத்து என்ன நடக்கும்? யார் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அதனால் இவர் இனி இந்த நிகழ்ச்சி எப்படி கொண்டு போகப் போகிறார் என்று எதிர்பார்ப்போடு மக்கள் பாதிபேர் இருக்கிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசனே அவ்வளவு திணறினார். இப்போ விஜய் சேதுபதி என்ன செஞ்சு விடப் போகிறார் என்று சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சி வழக்கம் போல இந்த சீசனும் குரூப்பிசம் இருக்கப்போகிறது என்றும் கூறி வருகிறார்கள்.
எது எப்படியோ இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்கு பிறகு தான் நிகழ்ச்சி எப்படி போகிறது என்று சொல்ல முடியும். அதே நேரத்தில் கடந்த சீசனில் டாஸ்க்குள் சுவாரசியமாக இல்லை. கடந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருந்தது. அது சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் அது பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மைதான்.
இந்த நிலையில் இந்த சீசனில் கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும் என்று தெரிகிறது. இதுவரைக்கும் பெட்ரூம் உட்பட எல்லாமே பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருவருக்கும் ஒன்றாக இருக்கும் நிலையில் இந்த முறை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் தனித்தனியாக ரூம்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் இப்போது வெளியாகியிருக்கிறது. இது சுவாரசியத்தை ஏற்படுத்துமா? அல்லது இதுவும் குருபிஸசம் ஏற்படுத்துமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications