ராணவ்க்கு மட்டும் அவ்வளவு சம்பளம்? இன்று வெளியாகும் மஞ்சரிக்கு இவ்வளவுதான் சம்பளமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் மஞ்சரி வெளியற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 68 நாட்களுக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்கள்தான்.

அதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கழித்து 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்தனர். அதில் ராணவ், மஞ்சரி, ரயான், ரியா, வர்ஷினி, சிவகுமார் போன்றோர் இருந்தனர். இதில் ஏற்கனவே ரியா, வர்ஷினி, சிவகுமார் என மூன்று பேரும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் நேற்று ராணவ் எவிக்ஷனாகி இருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் மஞ்சரி வெளியற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒன்பது போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் மஞ்சரி வெளியேற்றப்பட்டால் 8 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள். இந்த 8 போட்டியாளர்களில் ரயான் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்று இருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீசனில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் டைட்டில் வின்னர் என்று ஒரு சில வாரங்களுக்குள் ரசிகர்கள் அடித்து சொல்லிவடுவார்கள். ஆனால் இந்த சீசனில் யார் என்று யோசிக்க முடியாத வகையில் தான் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த அர்ச்சனா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த சீசனில் வைல்ட் கார்டில் வந்து ஐந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தான் பைனலுக்கு சென்று இருக்கிறார். அதில் ரயானும் டைட்டில் வெற்றி பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
ஆனாலும் இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர் வெற்றி பெற்றதற்கு சமம் என்று விஜய் சேதுபதி தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியேற்றப்படும் மஞ்சரியின் சம்பள விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதில் மஞ்சரிக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 18000 வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் 63 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுபோல நேற்று வெளியான ராணவிற்கு ஒரு நாளைக்கு 20 முதல் 22,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ராணவ் மொத்தம் 12 முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெற்று இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ராணவ் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதுபோல விஜய் சேதுபதி நடித்த இறைவி திரைப்படத்திலும் சில காட்சிகளில் வந்திருக்கிறார்.
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதனால் அவருக்கு அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மஞ்சரி விஜய் டிவியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதுபோல ஒரு மேடை பேச்சாளராக பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications