Bigg Boss 8: விஜய் சேதுபதி பட நடிகை முதல் சர்ச்சை நடிகர் வரை.. இத்தனை பேரா? வெளியான அடுத்த லிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற புதிய உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்பட நடிகை முதல் சார்பட்டா திரைப்படம் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் வரை பலர் வரப்போவதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வந்த வழங்கி வந்த ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க புது அதிரடியாக நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

இதற்கான போட்டியாளர்களையும் சேனல் தரப்பில் தீவிரமாக செலக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சில போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது சில போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே உத்தேச பட்டியல் தொடங்கி விடுவது வாடிக்கைதான்.
அந்த வரிசையில் இப்போதும் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத், நடிகை தர்ஷா குப்தா, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா ஆசாத், செல்லம்மா சீரியல் நடிகை அக்ஷிதா மற்றும் நடிகர் அர்னவ், அதுபோல தொகுப்பாளராகவும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் தீபக்,
உத்தேச பட்டியல்: நடிகர் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி, தயாரிப்பாளர் ரவீந்தர், டிடிஎப் வாசன் மற்றும் அவருடைய காதலி ஜோயா போன்ற பலருடைய பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இவர்களின் வரிசையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சந்தோஷ் பிரதாப் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கேரக்டர் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் சின்ன சின்ன கேரக்டரில் வருவது போல தான் இருக்கிறது. அதனால் தான் சந்தோஷ் பிரதாப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சந்தோஷ் பிரதாப்: சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்தோஷ் பிரதாப் பரீட்சையமாகவும் மாறியிருக்கிறார். பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதைத் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
சச்சிதா: அதுபோல சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பலருக்கும் பிரபலமான சச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல ஆரம்பத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திறையில் தான் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
அதற்குப் பிறகுதான் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் போது அப்பா மகள் பாசம் தான் எங்களுக்குள் ஏற்பட்டது நான் இப்போதும் அவரை அப்பா என்று தான் கூப்பிடுகிறேன் என்று சச்சிதா கூறி இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது விஜய் சேதுபதி ஏற்கனவே தெரியும் என்று ஆட்டிட்யூட் காட்டப் போகிறாரா? இல்லை இயல்பாக இருக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரியாஸ்கான்: அதுபோல சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் ரியாஸ் கானும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ரியாஸ்கான் ஆரம்பத்தில் இந்த சீசனில் உறுதியாக கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஏற்கனவே அவருடைய மகனும் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். அவரைப் போல அப்பாவும் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவர் மீது பெண் நடிகை ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்திருந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இவருடைய பெயரும் அந்த லிஸ்டில் இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications