Bigg Boss 8: விஜய் சேதுபதியே தொகுப்பாளரா வந்தாச்சு.. ஆனால் இந்த சீசனில் இத்தனை மாற்றமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. புது லோகோவை விடவும் புது தொகுப்பாளர் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீசனில் பல புதுமையான முயற்சிகளும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழில் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது கமல்ஹாசன் தான். அவருடைய கம்பீரமான குரல் மற்றும் போட்டியாளர்களிடம் நக்கல் மற்றும் நையாண்டி கலந்த பேச்சு. அதோடு போட்டியாளர்களின் தவறுகளுக்கு வார இறுதியில் இவர் செய்யும் பஞ்சாயத்து பார்ப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருந்தது.

ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தொடங்கி இருந்தது. இந்த நிலையில்தான் எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே தான் இந்த சீசனில் இருந்து ஓய்வெடுக்க போகிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். கமல்ஹாசன் இந்த முடிவு எடுத்தது சரி என்று ஒரு தருப்பினரும், தவறு என்று ஒரு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். இதுவெல்லாம் முடிந்து போன கதையாக இருந்தாலும் கமல்ஹாசன் இடத்தில் அடுத்து யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் போது பலருடைய சாய்ஸாக விஜய் சேதுபதி இருந்தார்.
இப்போது அவரையே விஜய் டிவி டிக் அடித்திருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் "நம்ம ஊரு ஹீரோ" என்ற தலைப்பில் ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தி இருந்தார். இது அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து அதே சேனலில் சில வருடங்கள் கழித்து "மாஸ்டர் செஃப்" நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியிருந்தார். சாப்பாடு பிரியரான விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் நடுநிலையாக பேசி வந்தார்.
ஆனால் தனக்கு இது போன்ற ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும் நிகழ்ச்சிகள் பிடிக்காது ஜாலியாக நிகழ்ச்சியை நடத்துவது தான் பிடிக்கும் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மகாராஜா திரைப்பட ப்ரோமோஷனுக்காக வந்தபோது சொல்லி இருந்தார். அதை அப்படியே மனதில் ஏற்றிக் கொண்டு பிக் பாஸ் டீம் விஜய் சேதுபதியை தூக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர் நினைத்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியாக இருக்க முடியுமா? என்றால் சந்தேகம் தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான சண்டை சச்சரவுகள், கோபம், காதல், துரோகம், ஏமாற்று வேலைகள் என பல விஷயங்கள் இருக்கும். இதற்கு கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து அவர்களை பாராட்ட வேண்டிய இடத்தில் இத்தனை வருடங்களாக கமல்ஹாசன் பாராட்டி இருந்தார். அதேபோல விஜய் சேதுபதி கையாளுவாரா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தான் விஜய் சேதுபதியின் நடவடிக்கை ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கிறதா என்று தெரியவரும்.
ஆனால் இந்த முறை விஜய் சேதுபதி தரப்பிலிருந்து ஏதாவது சரிவுகள் சேனல் தரப்பிற்கு வந்தால் அதை சரி செய்வதற்காக பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதற்காகவே போட்டியாளர்கள் தேர்வில் மிகவும் கவனமாகவும் கண்டென்ட் அதிகமாக கொடுக்கும் போட்டியாளர்களை பார்த்து தேர்வு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை கவனித்து இந்த முறை டிஆர்பியை அதிகப்படுத்துவதற்கு தனி டீம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல டாஸ்க் இந்த முறை வித்தியாசமாகவும் ரசிகர்கள் விரும்பும் வகையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சீசனில் டாஸ்க்குகள் பிற மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட டாஸ்க் என்று கலாய்க்கப்பட்ட நிலையில் இந்த முறை அதிலும் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக கொண்டு போவார் என்று நினைக்கிறீர்களா? அல்லது இவருக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா உங்கள் கமெண்ட்டை தட்டி விடுங்க பாஸ்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications