Bigg Boss 8: வந்தாச்சு புது பிக்பாஸ் ப்ரோமோ.. விஜய் சேதுபதி எடுத்த பொருள்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான ப்ரோமோவை இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி ஆறு மணிக்கு சேனல் தரப்பிலிருந்து வெளியிட்டு இருக்கின்றனர்.
இதுவரைக்கும் ஏழு சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனில் இருந்து அவர் விலகினார். அதைத்தொடர்ந்து யார் இந்த சீசனில் தொகுப்பாளராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று அறிவித்திருக்கிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கடுமையாக நடந்து கொண்டது எனக்கே விருப்பமில்லை என்று சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக கலந்து கொள்ளும் போது கமல்ஹாசன் போல இவரும் போட்டியாளர்கள் மனம் கோணாத வகையில் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை கொண்டு போவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி ஒரு பெரிய துணி கடை ஒன்றிற்குள் செல்கிறார். அங்கு ஆண்களுக்கான டிரஸ் எல்லாம் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் கோட்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து எடுத்து இருக்கிறார். இது எதை குறிப்பிட்டு இப்படி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் கமல்ஹாசன் விதவிதமான ஆடைகளோடு வந்து பிரபலப்படுத்தி இருக்கிறார். அதே பாதையை விஜய் சேதுபதியும் தொடர்கிறாரா? என்ற கேள்விகள் இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பாக இருக்குமா? அல்லது பழையபடி கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்க கமெண்ட்டை தட்டி விடுங்க.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications