பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. ராணவை அடித்த ரயான்! ரெட் கார்டு யாருக்கு? சிறப்பான சம்பவம் இருக்கு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 28 ஆம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பொம்மை டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ராணவை ரயான் அடித்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியானதுமே அதில் போடப்படும் சண்டை பிராங்கா அல்லது உண்மையா என்று கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஏற்கனவே இதுபோல முதல் வாரத்திலேயே சண்டைக் காட்சிகள் இருந்தது. அதை பார்த்ததும் ரசிகர்கள் என்ன ஆச்சு ஏதாச்சு என்ற பதறிப் போய் இருந்த நிலையில் கடைசியில் அது பிராங்க் என்று ஏமாற்றி விட்டனர்.

முதல் வாரத்தில் ரஞ்சித், ரவீந்தர் போன்றோர் நாமினேசன் லிஸ்டில் இருந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு பிராங்க் நாடகம் போட்டார்கள். அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறதா என்று கேட்டால் அதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது அதன் காரணமாக கூட இன்று இந்த பிரச்சனை நடந்திருக்கலாம்.
தற்போது ப்ரோமோவில் வந்த காட்சிகள் இன்னும் 24 மணி நேர எபிசோடில் வரவில்லை. அதனால் நேற்று நடந்ததை வைத்து இன்று பிரச்சனை நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நேற்று பொம்மை டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ராணவ் ஒரு வார்த்தை சொன்னார். அதாவது எனக்கு மட்டும் பவர் கிடைச்சா எல்லா பொம்மையும் அடிச்சு உடைத்து விடுவேன் என்று சொல்லியிருந்தார்.
அதை பிக் பாஸ் கவனித்து விட்டார் போல, அதனாலயே இன்று டாஸ்கில் அவுட் ஆகி வெளியே இருப்பவர்கள் கூட உள்ளே வந்து விளையாடலாம் என்று ரூல்ஸ் சொல்லிவிடுகிறார். அதனால் ராணவ் வந்திருக்கிறார். அவர் ஜெஃப்ரியை பிடித்து வைத்திருக்கிறார். அப்போது பொம்மையையும் சேர்த்து ராணவ் பிடித்து விட்டார் என்று ரயான் மற்றும் ராணவ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பிறகு ராணவை ரயான் அடிக்கவும் செய்து விடுகிறார். இது உண்மையில் நடக்கிறதா அல்லது சொல்லி வைத்துக்கொண்டு செய்கிறார்களா? என்ற கேள்விகள் வருகிறது. தற்போதைய ப்ரோமோ பார்க்கும் போது இது சொல்லி வைத்து செய்வது போல தான் தெரிகிறது. காரணம் அந்த ப்ரோமோவில் சில இடங்களில் ரயான் மற்றும் ராணவ் இருவருமே சிரித்து இருக்கிறார்கள். இதனால் இவர்கள் வழக்கம் போல இப்போதும் பிராங்க் செய்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆனால் இவர்கள் சண்டையை உண்மையே என்று நம்பி உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லாரும் பதறிப் போய் இருக்கிறார்கள். இதுபோல பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனிலும் பொம்மை டாஸ்க்கில் பெரிய சண்டை வந்தது. அதாவது அந்த சீசனில் தான் அசீம் மற்றும் தனலட்சுமி இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனையை ஏற்பட்டது.
அசீம் தனலட்சுமியை வாடி போடி என்று பேசியிருந்தார். அதற்காக கமல்ஹாசன் அசீமை கண்டித்து இருந்தார். அதுபோல இப்போது நடந்த சண்டை உண்மையாக இருந்தால் இதில் ரயானுக்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications