Bigg Boss 8 promo: பிக் பாஸுக்குள் புயலா! ரயான்- ராணவிற்கு செம டோஸ்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நவம்பர் 30ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதுவரைக்கும் இந்த டாஸ்க்கில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வீட்டிற்குள் கோடு போட்டு விளையாட்டு நடந்து வந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கி 50ஆவது நாள் முடிவடைந்த பிறகு வீட்டிற்கு நடுவில் இருந்த கோடு அழிக்கப்பட்டு இருந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதனால் விளையாட்டு வேற லெவலில் மாறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம்போல இந்த நிகழ்ச்சியில் ஒரே சண்டை சச்சரவுகள் தான் இருந்தது. பொதுவாக பொம்மை டாஸ்க் என்றால் அங்கு பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு சீசனிலும் பொம்மை டாஸ்க் வரும்போது அடிதடி வரைக்கும் போயிருக்கிறது.

பலருக்குள் இருக்கும் கோபம், வன்மம் எல்லாம் இந்த டாஸ்க்கில் தான் வெடிக்கும். நான் ஜெயிக்கவில்லை என்றால் மற்றவர்களும் ஜெயிக்க கூடாது என்று பலர் விளையாடுவதை பார்த்திருப்போம். அதுபோலத்தான் இந்த பொம்மை டாஸ்க்கில் ரயான் மற்றும் ராணவ் இருவரும் அடித்துக்கொண்டு விளையாடி இருந்தனர். ராணவ் விளையாட்டில் தோற்றதும் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் உள்ளே இருக்கும் எல்லா பொம்மைகளையும் அடித்து உடைத்து விடுவேன் என்று வீரமாக பேச, அதை கேட்ட பிக் பாஸ் உடனே டாஸ்க்கில் திருத்தம் செய்து விட்டார்.

டாக்கிங் அவுட் ஆகி வெளியே இருக்கும் போட்டியாளர்களும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். எப்படியும் இதில் கலகத்தை ஏற்படுத்தி பிரச்சனைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிக் பாஸின் குறிக்கோள். அது ராணவ் மூலமாக நடைபெற்றது.

ராணவ், ஜெஃப்ரி கொண்டு போன பொம்மையை அங்கு வைக்க விடாமல் தடுக்க அதற்கு ரயான் கோபப்பட்டு ராணவை அடிக்க பாய்ந்து இருந்தார். இந்த சண்டை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவிற்கு பரபரப்பு இல்லை. ஆனாலும் ரயான் அடிக்க போயிருந்தது அதிகமாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நடந்த கலவரம் பற்றி தான் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இதனால் இன்று ராணவ் மற்றும் ரயான் இருவருக்கும் ரோஸ்ட் இருக்கிறது. இருவருக்கும் விஜய் சேதுபதி எல்லோ கார்டு கொடுக்கப் போகிறாரா? அல்லது ரயானுக்கு மட்டும் கொடுக்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+