பிக் பாஸ் 8: விளையாட வந்தாங்களான்னு சந்தேகமா இருக்கு? ஒரே சண்டை.. முடிச்சு விட்டுருவோம்.. VJS பஞ்ச்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியின் அக்டோபர் 12ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இன்று சனிக்கிழமை என்பதால் விஜய் சேதுபதி இந்த வார போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பேசுவதற்காக வந்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் ஆறாம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக்பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசனில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான்.

அதனால் ரசிகர்களுக்கு ஏற்கனவே இவர்கள் பரீட்சையமானவர்கள் தான் அதனால் இவர்கள் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போவார்கள் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதும் பெண்கள் தனி அணியாகவும், ஆண்கள் தனியாகவும் இரண்டு அணியாக மோதுகிறார்கள். பெண்கள் அணியில் எப்போதும் சண்டை சச்சரவுகள் தான் இருக்கிறது. ஆண்கள் அணியில் இதுவரைக்கும் உள்ள சீசனை நன்றாக பார்த்து கரைத்துக் குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
அதனால் ஆண்கள் அணியினர் ஜாலியாக இருக்கும்போது போல ஜாலியாக இருந்தாலும், குத்து கொடுக்குற நேரங்களில் சரியாக ஊம குத்தாக குத்தி விடுகிறார்கள். நேற்று கூட யார் ஃபேக்? யார் ரியல்? என்று சொல்லும்போது ஆண்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மொத்த போட்டியாளர்களையும் சரியாக கணித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது எல்லோரும் நாங்கள் மகிழ்ச்சியை பரப்புவோம், பாசிட்டிவிட்டி பரப்புவோம், நாங்கள் யார் என்று ரசிகர்களுக்கு தெரிய வைக்க போறோம் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்கள்.
பிக் பாஸ் 8ன் முதல் நாளில் ரஞ்சித்துக்காக கலந்து கொள்ளாதது இதனால்தான்.. பிரியா ராமன் விளக்கம்

ஆனால் சொன்ன டயலாக் எல்லாம் அன்றே மறந்து விட்டார்கள் போல. வந்த நாளிலிருந்து இவர்கள் போடும் சத்தம் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் பக்கத்து வீட்டு வரைக்கும் பதற வைக்கிறது. ஒரு வாரம் முழுக்க இவர்கள் கத்திக்கொண்டே இருந்ததை பார்த்த ரசிகர்கள் வார இறுதியில் விஜய் சேதுபதி இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல இன்று ப்ரோமோவில் விஜய் சேதுபதி மாஸாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல இரண்டு மணிக்கு மேலே தான் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கப்பு தான் முக்கியம்னு உள்ளே போனாங்க. ஆனா பெட்டுக்கு சண்டை போடுறாங்க .சரின்னு கோடு போட்டு பிரிச்சுகிட்டு கேமை விளையாடுங்கன்னு சொன்னா உப்பு தாரேன் நீ தண்ணி தரியா? கரம் மசாலா இருக்கா என் நூடுல்ஸை யாரு திருடுனா? கொத்தமல்லி கட்டை யார் திருடுனா ?என்று கம்பிளை பண்ணிட்டு இருக்காங்க.

உண்மையாவே எனக்கு தெரியல இவங்க கேம் விளையாட தான் போனாங்கல்ல இல்ல டூருக்கு எதுவும் போயிருக்காங்களான்னு தெரியல. இன்னைக்கு பஞ்சாயத்தில் என்னதான்னு பேசி முடிச்சிடுவோம்.. என்று விஜய் சேதுபதி பேசி இருக்கிறார். விஜய் சேதுபதி இன்று எளிமையாகவும் அதே நேரத்தில் மாஸாகவும் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் இன்று என்ன தான் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications