Bigg Boss 8 promo 2: இது அதுல்ல.. வன்மத்தை இறக்கிய பெண்கள்! முத்துக்குமரன் கடைசியில் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இன்று நடக்கும் டாஸ்க்கில் நேற்று ஆண்கள் செய்த செயலுக்காக பெண்கள் பழிவாங்கி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் முதல் வாரம் முழுக்க சண்டை சச்சரவுகளோடு இருந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் இருந்து சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தற்போது மூன்றாவது வாரத்தில் சில நேரங்களில் சண்டை காட்சிகள் இருந்தாலும் சில நேரங்களில் காமெடியான காட்சிகளும் இருக்கிறது.

bigg boss tamil 8 bigg boss 8 8

நேற்று நடந்த டாஸ்கில் ஆண் போட்டியாளர்களும் சரி பெண் போட்டியாளர்களும் சரி சிறப்பாகவே செயல்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நேற்று பிக் பாஸ் வீடு ஒரு ஹோட்டல் ஆக மாறப்படுகிறது. அங்கு ஆண் போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக வருவார்கள் அவர்களின் மனம் கோணாதபடி அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் பெண் போட்டியாளர்கள் செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருந்தனர்.

அப்படி செய்யாத பட்சத்தில் போட்டியாளர்கள் மேனேஜராக இருக்கும் நபர் மாற்றப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆண் போட்டியாளர்கள் சில அலப்பறைகளை செய்தனர். பெண்கள் பொறுமையாக முயற்சி செய்தனர். ஆனாலும் சில இடங்களில் அவர்களையும் மீறி சொதப்பி வைக்க அதையே குறையாக கண்டுபிடித்து ஆண் போட்டியாளர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தனர்.

bigg boss tamil 8 bigg boss 8 8

இதனால் பெண்கள் அணியின் மேனேஜராக இருந்த பவித்ரா மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சுனிதா புதிய மேனேஜராக வந்தார். அப்போது ஏதோ நிஜத்தில் மேனேஜர் பதவி பறிக்கப்படுவது போல பவித்ரா என்னை வேணும்னே டார்கெட் பண்ணி இப்படி பண்ணிட்டாங்க என்று அழுது கொண்டிருந்தார். அதே சம்பவம் இன்றைய ப்ரோமோவில் நடந்திருக்கிறது.

இன்றைய எபிசோடில் பெண்கள் கெஸ்ட் ஆகவும் ஆண்கள் ஹோட்டலை கவனிக்கிறார்கள். அதில் பெண்கள் ஆண்கள் பற்றி பல கம்ப்ளைன்ட் எழுதி இருக்கிறார்கள். நேற்று ஆண்கள் சில ரிவ்யூ மட்டும் தான் கொடுத்திருந்தார். ஆனால் பெண்கள் 20-க்கு மேற்பட்ட ரிவ்யூ கம்ப்ளைன்ட் அந்த போர்டில் எழுதி இருக்கிறார்கள்.

bigg boss tamil 8 bigg boss 8 8

இதை பார்க்கும்போது நேற்று பசங்க செஞ்சதற்காக இன்று வன்மத்தை கொட்டுவது போல தான் இருக்கிறது. இது இப்படித்தான் நடக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் அந்த போர்டில் முதலில் எழுதப்பட்டிருக்கும் கம்பளைண்டில் விஷால் க்ரிஞ்சா பண்ணுறான் என்று எழுதி இருக்கிறார்.

அடுத்ததாக சுனிதா, இவங்களுக்குள்ள கோடினேஷன் சரியில்ல. கஸ்டமர் கிட்ட பொய் சொல்றாங்க என்று சொல்கிறார். அடுத்ததாக வரும் தர்ஷிகா சுத்தம் இங்க சுத்தமா இல்ல என்று கம்ப்ளைன்ட் சொல்கிறார். அப்போது அங்கு காபி கப் யாரோ குடித்து வைத்து இருப்பது போல தெரிகிறது. அதை சத்யா கிளீன் பண்ணி கொண்டு இருக்கிறார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அடுத்ததாக பாட்டி கெட்டப்பில் வந்திருக்கும் அன்ஷிதா அங்கு துணி துவைத்திருக்கிறார். இதை வைத்து கூட பெண்கள் அணியினர் குறை சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்துக்குமரன் நீங்க எல்லாரும் இந்த ஹோட்டலுக்கு கஸ்டமர் வந்து இருக்கீங்க. நீங்க எல்லாரும் எனக்கு புதுசு என்பதால் உங்களை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக அதிகமான கம்ப்ளைன்ட் இருந்த காரணத்தால் பிக் பாஸ் ஆண்கள் அணியில் இருக்கும் மேனேஜர் மாற்றப்படுகிறார். புது மேனேஜர் இனி அப்பாயிண்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதற்கு முத்துக்குமரன் இவங்க வேணும்னு பண்ணிட்டாங்க திருட்டு பசங்க என்று சிரித்தபடியே புலம்பி கொண்டிருக்கிறார்.

இது நேற்று பவித்ரா சொன்னது போலவே இருக்கிறது பவித்ராவை கிண்டல் செய்வது போல முத்துக்குமரன் எப்படி சொல்கிறாரா? அல்லது மனம் நொந்து போய் இப்படி சொல்கிறாரா? என்று தெரியவில்லை என்று எபிசோடு தான் இதில் தெரிய வரும். ஆனால் நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு பழிவாங்க வேண்டும் என்றே இன்று பெண்கள் அணியினர் ஆண்களை போட்டு தாக்கி இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. ஆனாலும் டாஸ்க் முடிவில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+