கவனிக்க வேண்டியது அவங்க புத்தியை தான்.. விஜய் சேதுபதி பஞ்ச்.. இந்த வாரம் சம்பவம் இருக்கு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 26ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று சனிக்கிழமை என்பதால் மதியத்துக்கு மேல தான் ப்ரோமோ வந்து இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி இந்த வார போட்டியாளர்களின் நடவடிக்கை குறித்து பேச இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் முழுக்க போட்டியாளர்களின் விளையாட்டை பார்க்காத ரசிகர்கள் கூட வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்று காத்திருக்க தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் கமல்ஹாசன் ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில் பலர் கமல்ஹாசனுடைய பேச்சு அவருடைய பஞ்ச் வசனம், புத்தகப் பரிந்துரை மற்றும் அவருடைய டிரஸ் பார்ப்பதற்காக கூட வார இறுதி நாட்களை தவறாமல் பார்த்து இருக்கிறார்கள்.

இப்போது விஜய் சேதுபதி இரண்டு வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில விமர்சனங்கள் அவர் மீது வர தான் செய்கிறது. முதல் வாரத்தில் போட்டியாளர்கள் யாரையும் பேசவிடாமல் அவரே பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேச்சுகள் எழுந்தது.
இரண்டாவது வாரத்தில் ஒரு சில போட்டியாளர்களை நோஸ்கட் செய்வது போல பேசுகிறார். மேடையில் அர்னவை முதலில் பேச சொன்னது விஜய் சேதுபதி தான். ஆனால் சக போட்டியாளர்கள் குறித்து ஜால்ராஸ் என்று அர்னவ் பேச தொடங்கியதும், என் போட்டியாளர்களை நீங்க பேசக்கூடாது என்று மாத்தி பேசிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வருகிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இந்த வாரம் மூன்றாவது வாரம் தொடங்கிவிட்டது.
மூன்றாவது வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை தாண்டியும் விஜய் சேதுபதி இந்த வாரம் என்ன பஞ்சாயத்து செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த வாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பந்தி உணவு பிரச்சனை பற்றி தான் சனிக்கிழமை எபிசோட்டில் பேசியிருந்தார்.
இன்றைய எபிசோட்டில் என்ன பேசப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வழக்கம் போல இந்த வாரமும் மதியத்திற்கு மேலே ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி விளையாட்டு ஒன்னு தான் அதில் கட்டம் கட்றாங்களா? இல்ல ஆக்ரோஷத்தை காட்டுறாங்களா? சுவாரசியத்தை கூட்டுறாங்களா? என்று விளையாடுறதை வச்சு தான் அவங்க யாருன்னு நமக்கு சொல்றது.
அப்போ நம்ம கவனிக்க வேண்டியது விளையாட்டு இல்ல. விளையாடறவங்களோட புத்தியை தான். அவங்க புத்தியை கவனிச்சிடலாமா? என்று பேசி இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்ததும் அடுத்த ப்ரோமோ எப்போ வரப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications