பிக் பாஸ் 8: வாடி, போடி.. பவித்ரா, விஜே விஷால் இடையே வெடித்த பிரச்சனை.. வெளியான முதல் ப்ரோமோ
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜே விஷால் மற்றும் நடிகை பவித்ரா ஜனனி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கும் என்பதை ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். வெளியே இருக்கும்போதே உள்ளே போய் எப்படி எல்லாம் சண்டை போடலாம் என்று பிளான் போட்டு யோசித்து உள்ளே வந்திருப்பார்கள் என்று தான் தோணுகிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இவர்களுக்குள் வாக்குவாதம் தொடங்கி விடுகிறது.

பொதுவாக ஒரு வீட்டிற்குள் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பல நேரங்களில் கருத்து ஒற்றுமை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து ஒரு வீட்டிற்குள் போட்டியாளர்கள் வரும்போது அவர்களுக்குள் பிரச்சனை வரும் ஆனால் அது முதல் நாளே இப்படி வருமா? என்று தான் யோசிக்க வைக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது ஆனாலும் ஆளாளுக்கு கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்று எதை எடுத்தாலும் பிரச்சனை என்பது போல பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நேற்று ஆண்கள் அணியில் இருந்து ஒரு போட்டியாளர் பெண்கள் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். அதுபோல பெண்கள் அணியில் இருந்து ஒரு போட்டியாளர் ஆண்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இரண்டு பிரதிநிதிகளும் மாறி மாறி வீட்டிற்குள் போவதற்கு முன்பே அதிகமாக பிளான் போட்டு இருக்கிறார்கள். இதனால் இவர்களுடைய விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்பது இனி தான் தெரியவரும்.
அதற்குள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் வீட்டிற்குள் சென்ற பவித்ரா மற்றும் அந்த வீட்டில் இருக்கும் விஜே விஷால் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்திருக்கிறது. விஜே விஷால் பவித்ராவை "டி" போட்டு பேசி இருக்கிறார். அதற்கு பவித்ரா எனக்கு டி போட்டு பேசுறது பிடிக்காது. நீ போட்டு பேசாதே என்று கத்தி பேசுகிறார். விஜே விஷால் நான் எதுவும் தப்பா பேசலையே என்று புரிய வைக்கப் போகிறார்.
மற்ற போட்டியாளர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்று தடுக்கிறார்கள். ஆனாலும் பவித்ரா எனக்கு நீ டி போட்டு பேசுவது பிடிக்காது. நீ சொன்னதை நான் பண்ணணும் என்று ஒன்னும் இல்லை என்று கத்தி பேச, அதற்கு விஷால் நீ நான் உன்னை டி போட கூடாது என்று சொல்ல முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவரை அங்கு இருப்பவர்கள் கார்டன் ஏரியாவிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் அங்கேயும் வந்த பவித்ரா கிச்சன்ல நான் 4 வாட்டி சொன்னேன் டி சொல்லாத டி சொல்லாதன்னு சொன்னேன். ஆனாலும் சொல்லிட்டே இருக்கிற என்று கத்துகிறார். இந்த ப்ரோமோ இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பவித்ரா அதிகமாக ஓவியா போலவே ஆக்டிவிட்டி செய்து வருகிறார்.
இது உண்மையில் அவருடைய கேரக்டர் தானா? அல்லது நிகழ்ச்சிக்காக இவர் இப்படி நடந்து கொள்கிறாரா? என்று இன்னும் ஒரு சில நாட்களில் தெரியும். அதே நேரத்தில் இப்போது விஜே விஷால் மற்றும் பவித்ரா இடையே வந்த சண்டை கூட உண்மையா அல்லது பெண்கள் அணியினரை ஏமாற்றுவதற்காக இப்படி ஒரு பிளான் போட்டு இருக்கிறார்களா? என்று இன்றைய எபிசோடில் தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications