பிக் பாஸ்க்குள் “அந்த” நபர் பேசியதை கேட்டு உடைஞ்சுட்டேன்! ரஞ்சித் இப்படித்தான்! பிரியா ராமன் ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு ரஞ்சித் பற்றி அவருடைய மனைவி பிரியா ராமன் பேட்டியில் பல தகவல்களை பேசி இருக்கிறார். அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சாச்சிகா பேசியதை கேட்டு தான் உடைந்து போய் விட்டேன் என்று கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் யார் உண்மையாக இருக்கிறார்? யார் பொய்யாக இருக்கிறார்? என்று நேற்று முன்தினம் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதில் அதிகமான ரஞ்சித் நடிக்கிறார் என்று பலர் கூறியிருந்தனர். சாமி, தங்கங்களா, தம்பி, தங்கை என்று பொய்யாக பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அவர் மீது பலர் குற்றச்சாட்டு வைத்தனர். இது குறித்து நடிகர் ரஞ்சித்தின் மனைவியான நடிகை பிரியா ராமன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

பிரியா ராமன் பேசுகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒரு சிலர் ரஞ்சித் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கிறார்கள் அதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. காரணம் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கிறாரோ அதுதான் அவருடைய இயல்பான கேரக்டர். ஆனால் அதை கொஞ்சம் கூட தெரியாதவர்கள் அவர்களைப் போல ரஞ்சித் இல்லை என்பதற்காக அவர் பொய்யாக இருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?
ரஞ்சித் அவருடைய ஊரில் அவர் பழகியபடி சாமி, கண்ணு, தங்கங்களா என்று எல்லாரையும் கூப்பிடுகிறார். ஆனால் உள்ளிருக்கும் பலர் சிட்டியில் வளர்ந்தவர்கள் அவர்கள் இந்த மாதிரி பேசியது கிடையாது என்பதால் இப்படி பேசுபவர்கள் தப்பு அவர்கள் பொய்யாக இருக்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம் என்பது என்னுடைய வருத்தமாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பல பெண்கள் ரஞ்சித் பேக் என்று ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. காரணம் அந்த பெண்கள் பார்த்த ஆண்கள் வேறு விதமாக இருக்கிறார்கள். அந்த பெண்களே அதை சொல்லி இருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் அப்பாவாகவோ அண்ணனாகவோ ஒரு முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டியவர்கள் செய்த அலட்சியத்தால் தாங்கள் பட்ட வேதனைகளை அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால் ரஞ்சித் அவர்களிடம் இயல்பாக பேசினால் கூட அவர்கள் இவர் பொய்யாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார். அது எனக்கு புரிகிறது. ஆனால் அவரோடு பழகி பார்த்த பிறகும் ஆண்கள் அவர் பொய் என்று சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் சில நாட்களில் ரஞ்சித்துடைய உண்மையான கேரக்டரை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
அதுபோல இந்த கேமை பெண்களில் சிலர் சரியாக விளையாடுகிறார்கள். அதில் சாச்சிகாவையும் சொல்லியே ஆக வேண்டும். அவரை மகாராஜா படத்தில் பார்த்த ரசிகர்கள் ஐயோ பாவம் என்கிற ரீதியில் அவர் மீது அனுதாபத்தை வைத்திருந்தனர். அதேபோல நிகழ்ச்சி தொடங்கிய வேகத்திலேயே அவரை வெளியேற்றப்பட்டதும் அவர் மீது கூடுதல் அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தது.
சின்ன பொண்ணு அவருடைய கனவுகளை அடைவதற்குள் அவர் வெளியேற்றப்பட்டு விட்டாரே என்பது பலருடைய வருத்தமாகவும் இருந்தது. நானும் அப்படி வருத்தப்பட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்த பிறகு அவர் பேசியதை கேட்டு உடைந்து போய்விட்டேன். என் மனம் கண்ணாடி போல சிதறி போனது. காரணம் இந்த குறுகிய நாட்களுக்குள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே, இவ்வளவு அப்சர்வ் பண்ணி இருக்கிறாரே என்று நான் வியந்து பார்த்தேன் என்று பிரியா ராமன் பேசி இருக்கிறார்.
அதோடு மேலும் அவர் பேசுகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் ரஞ்சித்தின் பேச்சு வழக்கை மட்டும் கிண்டல் செய்யவில்லை. அவரை போல பேசுபவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பலர் வருத்தப்பட்டு அவங்களுடைய கருத்துக்களை என்னிடம் ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதற்கு பொருங்கள், இன்னும் நாட்கள் இருக்கிறது உங்கள் பிரதிநிதியாக தான் ரஞ்சித் போயிருக்கிறார். அதனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன் என்றும் பிரியாராமன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications