Bigg Boss 8: இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு! விஜய் சேதுபதி பஞ்ச்! ப்ரோமோவில் யாரு பாருங்க
சென்னை: விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதற்கான இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி இந்த சீசனில் ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு என்று வித்தியாசமாக பஞ்ச் வசனம் பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் இதுவரைக்கும் ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசனில் தான் ரெஸ்ட் எடுக்க போவதாக குறிப்பிட்டு இருந்த நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவுத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி கமல்ஹாசனை விட வித்தியாசமாக நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதி கலக்கி இருக்கிறார். ப்ரோமோவின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி கோட் போட்டு நிகழ்ச்சிக்கு தயாராக இருப்பது போன்று இருக்க அப்போது வந்த டெய்லர் சார் பர்ஃபெக்ட்டா இருக்கிறீங்க என்று சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி அப்படியா என்பது போல கேட்கிறார்.

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி காரில் நிகழ்ச்சிக்கு போய்க் கொண்டிருப்பது போல காட்டப்படுகிறது. அப்போது டிரைவர் சார் நிகழ்ச்சிக்கு கார்வலம் போனால் போதாது ஊர்வலம் போகணும் என்று டிப்ஸ் கொடுக்க விஜய் சேதுபதி அங்கிருந்து இறக்கி ஒரு பூங்காவில் வாக்கிங் போகிறார். அப்போது வாக்கிங் போகும் பெரியவர்கள் விஜய் சேதுபதியை நிறுத்தி "இந்த குருபிஷம் பண்றவங்க.. டாமினேட் பண்றவங்க எல்லாவற்றையும் ஓட விடணும்" என்று சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி சரி என்பது போல தலையை ஆட்டிக் கொள்கிறார்.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி மார்க்கெட்டில் தக்காளி வாங்கி கொண்டு இருக்கிறார். அப்போது காய்கறி விற்கும் பெண் "தம்பி தக்காளியில் நல்லது எது? கெட்டது எதுன்னு? பார்த்தாலே தெரியும். ஆனால் மனுஷங்கள்ல நல்லவங்க யாருன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்" என்று கேட்க விஜய் சேதுபதி யோசிக்கிறார். பிறகு ஒரு கிரவுண்டில் சிறுவர்கள் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது ஒரு சிறுவன் அங்கு நின்று இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை கூப்பிட்டு "அங்கிள் தப்பா விளையாண்டா எப்போ ரெட் கார்டு கொடுக்கணும்னு தெரியும்ல்ல.. தெரியலன்னா என்ன பாத்து கத்துக்கோங்க" என்று சொல்கிறார். பிறகு விஜய் சேதுபதி பஸ்ஸில் பயணிக்கிறார். அப்போது பஸ் கூட்டமாக இருக்கும்போது அங்கு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு சீட்டு கொடுத்துவிட்டு விஜய் சேதுபதி எழுந்து நிற்கிறார்.

அங்கிருந்த இளைஞர்கள் "ப்ரோ உங்க இளகின மனசு எல்லாம் 12Bக்கு ஓகே BBக்கு வேண்டாம்" என்று சொல்ல அதற்கு விஜய் சேதுபதி தலையை ஆட்டி கொள்கிறார். பிறகு தெருவோர கடையில் அமர்ந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது பஜ்ஜி போட்டுக் கொண்டிருக்கும் பெண் "தம்பி வாழைக்காய் பஜ்ஜி மாதிரி வளவளன்னு பேசாம மிளகாய் பஜ்ஜி மாதிரி சுருக்குன்னு கேட்கணும்" என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து சலூனில் விஜய் சேதுபதி இருக்க அங்கு முடி வெட்டும் நபரிடம் என்னடா பம்முற உனக்கும் ஏதாவது கருத்து இருக்கா? என்று கேட்க, "ஆமா அண்ணே வீக் எண்டு டேஸ்ல எல்லாம் நல்லவன் மாதிரி பண்ணுவாங்க. ஆனா வீக் டேஸ்ல எகிறுவாங்க உஷாரா இருங்க சார்" என்று சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி சரிங்க என்று தலையை ஆட்டிக் கொள்கிறார்.

பிறகு பிக் பாஸ் மேடைக்கு வந்து, "முதலில் களத்தில் இறங்கணும். நம்ம இலக்கு என்னன்னு தெரிஞ்சுக்கணும், அதுக்காக கடினமா உழைக்கணும். உங்களுக்கு விருப்பமான ஷோவை இன்னும் நெருக்கமா கொண்டு வர பிக் பாஸ் 8. இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்வது போல சொல்லிவிட்டு பிறகு நக்கல் செய்து சிரிக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுத்து வழங்குவது குறித்து உங்கள் கருத்து என்ன கமாண்ட தட்டி விடுங்க பாஸ்.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications