பிக் பாஸ் 8: ப்ரோமோ சூட் தொடங்கியது.. கமலுக்கு பதிலாக களம் இறங்கிய சன் டிவி நடிகர்.. லீக்கான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் தொடங்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி ப்ரோமோ சூட்டிங்கில் கலந்து கொண்டதாக இருக்கிறது.

விஜய் டிவியில் பெயர் வாங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். உலகநாயகனாக ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வந்த கமல்ஹாசன் முதல் முறையாக சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தார்.

vijay tv bigg boss entertainment

ஏற்கனவே நடிகர் சரத்குமார், சூர்யா போன்ற பலர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார். தன்னுடைய அரசியல் நுணுக்கங்கள் பற்றி அவ்வப்போது மேடையில் பயங்கரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு தன்னுடைய சித்தாந்தங்கள், சமூக அவலங்கள் குறித்தும் கமல்ஹாசன் ஒவ்வொரு வார இறுதியிலும் பேசி வந்தார்.

அதுபோல தனக்கு பிடித்த புத்தகங்கள், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை கமல்ஹாசன் பேசுவதை பார்ப்பதற்காகவே வார இறுதி நாட்களில் பல ரசிகர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பஞ்சாயத்தை வார இறுதியில் வாத்தியாராக கமல்ஹாசன் வந்து தீர்த்து வைத்தது பலரையும் கவர்ந்தது. ஆனாலும் ஒரு சில சீசன்களாக கமல்ஹாசன் மீது சிலர் பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.

vijay tv bigg boss entertainment

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமல்ஹாசன் எட்டாவது சீசனில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார். அதோடு தனக்கு அதிகமான வேலைப்பளு இருப்பதால்தான் தன்னால் இந்த சீசனில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் யார் அடுத்த தொகுப்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

அதே நேரத்தில் கமலுக்கு பதிலாக சிம்பு அல்லது விஜய் சேதுபதி, சரத்குமார், அர்ஜூன், ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா என்று பலருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இறுதியில் விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுப்பாளராக தேர்வாகி இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருக்கிறார்.

vijay tv bigg boss entertainment

அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி ப்ரோமோ சூட் பாண்டிச்சேரியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் எட்டாவது சீசனின் ப்ரோமோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியலும் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதி என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஏற்கனவே பலருக்கும் பரிச்சயமானவர். ஆனால் சமீபத்தில் மகாராஜா பட ப்ரமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட போது நான் இதற்கு முன்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ரொம்பவும் டெரராக இருந்தது. அங்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனக்கு அப்படி இருக்க கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தார். இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+