பிக் பாஸ் 8: பலரை அழ வைத்து வெளிவந்த RJ ஆனந்திக்கு இவ்வளவு சம்பளமா? இந்த சீசனில் யாரும் வாங்காதது!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுகிழமை எபிசோடு 2 எவிக்ஷன் நடைபெற்றது. அதில் முதலாவதாக வெளியேற்றப்பட்ட ஆர்.ஜே. ஆனந்தி இந்த நிகழ்ச்சியில் இருந்து 63 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்? என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்கு பிறகு 6 வைல்டு கார்ட் போட்டியாளர்கள் இருந்தனர். இதில் ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது: இதனால் இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் இருந்த நிலையில் நேற்று இரண்டு எவிக்ஷன் என்று விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களே கடந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் டபுள் எவிக்ஷன் நடக்கவில்லையே என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்று செம ட்ரீட் கிடைத்திருக்கிறது.
சேவ் ஆன போட்டியாளர்கள்: ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனாவை அடுத்தடுத்து எலிமினேட் செய்து விஜய் சேதுபதி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருந்தார். கடந்த வாரத்தில் எவிக்ஷன் லிஸ்டில் மொத்தம் 12 பேர் இருந்தனர். அதில் வீக்என்ட் எபிசோடில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை விஜய் சேதுபதி சேவ் செய்திருந்தார்.
எதிர்பார்க்காத போட்டியாளர்கள்: அதை தொடர்ந்து மீதமுள்ள 10 பேரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற பயத்தோடு இருந்த போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்க என்று கேட்டிருந்தார். அதற்கு எல்லோரும் ரயான் மற்றும் சத்யாவின் பெயரை சொல்லி இருந்தனர். ஆனால் அதில் ஒருவர் கூட ஆர்ஜே ஆனந்தி பெயரையோ சாச்சனா பெயரையோ சொல்லவில்லை.
டபுள் எவிக்ஷன்: அதனால் விஜய் சேதுபதி எவிக்ஷனில் ஆனந்தி மற்றும் சாச்சனா பெயர் அறிவித்ததும் அங்கிருந்த போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முதலில் ஆர் ஜே ஆனந்தியை தான் விஜய் சேதுபதி எலிமினேட் செய்திருந்தார். அவருடைய பெயரை அறிவித்ததும் அவருடைய தோழிகளான பவித்ரா அன்ஷிதா எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
கதறி அழுத அன்ஷிதா: ஆனால் ஆர்ஜே ஆனந்தி தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிரித்த முகமாக வெளியே வந்தார். இந்த சீசனில் டபுள் எவிக்ஷனில் சிக்கி எலிமினேட்டான ஆர் ஜே ஆனந்தி வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி ஆனந்திக்கு ஒரு எபிசோடுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
RJ ஆனந்தியின் சம்பளம்: ஆனந்தி மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை எலிமினேட்டான போட்டியாளர்களின் அதிக சம்பளத்தோடு வெளியான போட்டியாளர் ஆர் ஜே ஆனந்திதான்.
ஆனந்தியின் சாதனை: அதுபோல இவரோடு வெளியான சாச்சனாவை விட ஆனந்திக்கு தான் அதிக சம்பளம். சாச்சனாவிற்க்கு ஒரு எபிசோடுக்கு இருபதாயிரம் தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த சீசனில் இதுவரைக்கும் வெளியே வந்த போட்டியாளர்களில் அதிகமான நாட்கள் இருந்து வெளியே வந்த போட்டியாளர் ஆர்ஜே ஆனந்தி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications