பிக் பாஸில் எதிர்பார்க்காத 2 எவிக்ஷன்.. அதுவும் இவங்க? அதிரடி என்ட்ரி வேற இருக்கு! டைட்டில் இவருக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் 14வது வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் தீபக் மற்றும் அருண் என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இப்போது வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்கு 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியே சென்ற 8 போட்டியாளர்களும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.

அதுபோல இந்த வாரத்தில் பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பு கொடுத்திருக்கிறார். அதாவது வெளியே சென்று ரீ என்ட்ரி கொடுக்கும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் இரண்டு போட்டியாளர்களை ரீப்ளேஸ் செய்யப் போகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் உள்ளே ரீ என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்களை மனதளவில் குழப்பம் அடையும் வகையில் பேசி கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
நேற்று மாலை வெளியான தகவலின் படி வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா கடைசி இடத்தில் இருந்தார். அவரை தொடர்ந்து அருண் மற்றும் தீபக் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை சூட்டிங் வழக்கம் போல தொடங்கிய நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் தீபக் மற்றும் அருண் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் ரசிகர்களை இந்த செய்தி பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தும். காலையில் போடப்பட்ட மார்னிங் பாடலில் நாட்டு நாட்டு என்ற இரண்டு பாடல் ஒலிக்கப்பட்டது. அதில் இரண்டு நண்பர்கள் டான்ஸ் ஆடுவது போல் இருக்கும் அதனால் இந்த வாரத்தில் இரண்டு ஆண்கள் தான் வெளியேறி வருவார்கள் என்றும் கூறப்பட்டது. அதனால் அருண் மற்றும் விஜே விஷால் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக்கின் வெளியேற்றம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தீபக் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை வெளியேற்றியது அன்ஃபேர் எவிக்ஷன் என்றும் கூறி வருகிறார்கள். அதுபோல கடந்த சில நாட்களாக கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அருண் சரியாக தன்னுடைய விளையாட்டை விளையாடி இருந்தார். ஆனாலும் அவரும் எவிக்ஷன் என்று கூறப்படுகிறது.
அதனால் பவித்ரா மற்றும் விஜே விஷாலை கடைசி வரை கொண்டு போவதற்காக பிக் பாஸ் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாரா அல்லது இந்த நிகழ்ச்சியை பற்றி மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார்களா? என்ற குழப்பமும் இருக்கிறது.
ஆனாலும் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதியின் முகம் சோகமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தீபக்கின் வெளியேற்றமாக கூட இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதுபோல அடுத்த வாரத்தில் ஏற்கனவே 6 போட்டியாளர்கள் அதாவது ஜெஃப்ரி, அன்ஷிதா, சத்யா, ரஞ்சித், மஞ்சரி மற்றும் ராணவ் வரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதுபோல இந்த சீசனில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications