பிக் பாஸ் 8: கண்ணீரோடு வெளியே சென்ற ரியா.. சம்பளம் இவ்வளவு தானா? இதுவரை யாரும் வாங்காதது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக எலிமினேஷனான ரியா தியாகராஜன் வாங்கிய சம்பள விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் வாங்காத அளவிற்கு குறைவான சம்பளம் இவர் பெற்றிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 9 ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும் ஆரம்பத்தில் கலந்து கொண்டனர்.

அதில் முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் ஆனார். அவரை தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அடுத்த வாரத்தில் எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் உள்ளிருந்த போட்டியாளர்களில் சாச்சனா தப்பிக்கப்பட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து ஐந்தாவது வாரத்தில் சுனிதா எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆனார்கள். அவர்களில்
ரியா நேற்று ஆறாவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ரியா தியாகராஜன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் மக்கள் மனதில் பதிகிற மாதிரி சில செயல்களை செய்திருக்கிறார்.
அதோடு சில விமர்சனங்களையும் பெற்று வருகிறார். அடிக்கடி இவர் கும்பிட்டுக் கொள்வதை பார்த்து பலர் கும்புடுறன் சாமி என்று இவரை கிண்டல் செய்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இவரை பலர் கேலி செய்வது வாடிக்கையாக இருந்தது. ஏற்கனவே இவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது வெளியே அதிகமாக புல்லி செய்யப்பட்டு இருக்கிறேன்.
என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், அதை சொல்வதற்கு கூட எனக்கு யாரும் இல்லை என்றெல்லாம் வேதனையை பகிர்ந்து இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் இவர் செய்த செயல் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. தொடர்ந்து இவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று நினைக்கப்பட்ட நிலையில் 14 நாட்களில் இவர் வெளியேற்றம் அடைந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் நேற்று வெளியேற்றம் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்தது. அதாவது இதுவரைக்கும் யாரு எலிமினேஷன் என்பதை விஜய் சேதுபதி கார்டு காட்டி அறிவிப்பார். ஆனால் நேற்று உள்ளே எலிமினேஷன் ஆன எல்லா போட்டியாளர்களுக்கும் ஒரு நம்பர் கொடுக்கப்பட்டு கார்டன் ஏரியாவில் அந்த நம்பர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் யாருடைய நம்பர் இல்லையோ அவர் வெளியேற்றம் செய்து அனுப்பப்படுவார் என்று சொன்ன நிலையில் அதில் ரியா நம்பர் மட்டும் இல்லாமல் அவர் வெளியேற்றம் செய்திருந்தார். அப்போது கூட அவர் அழுதது பலரயும் பீல் பண்ண வைத்திருந்தது.
இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததற்காக வாங்கும் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ரியாவிற்கு ஒரு நாளைக்கு 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 14 நாட்களில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் கம்மியான சம்பளம் பெற்ற போட்டியாளர் ரியாவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு ரியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து லட்சம் வரைக்கும் செலவு செய்திருக்கும் நிலையில் அவருடைய கனவு மொத்தமாக உடைந்து போய் இருக்கிறது. வெளியுலகில் இனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications