பிக் பாஸ் 8: முதல் நாளே ஓபன் நாமினேஷன்.. வெளியே அனுப்பப்பட்ட பெண் போட்டியாளர்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. இதில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதலில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. அதில் ஓபனாக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கிறார்கள். யார் வெளியேறி இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று வான வேடிக்கை, கானா பாடல் மானாட்டம், மயிலாட்டத்துடன் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக இருக்கும் என்று விஜய் டிவி புது ப்ளான் போட்டு இருக்கிறது. அதோடு முதல் நாளே நிகழ்ச்சி பற்றிய பேச்சை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி விட்டனர்.

அதாவது நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இது எந்த சீசனிலும் இதுவரைக்கும் இல்லாதது. இதை இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரசிகர்களும் இது பற்றி பேசி வரும் நிலையில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று யாரை வெளியேற்றம் செய்யலாம் என்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கிறது. போட்டியாளர்களில் பலர் ஏற்கனவே பழக்கமானவர்களாக இருந்தாலும் நிகழ்ச்சியில் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியாமலேயே அடுத்தவர்களை அவர்களுடைய முகத்துக்கு நேராகவே நாமினேஷன் செய்ய பிக் பாஸ் வைத்திருக்கிறார். முதல் நாள் தொடங்கிய பிரச்சனை இனி நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று முதல் நாளே பிக்பாஸ் கொளுத்தி போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே இந்த சீசனில் வீட்டிற்குள் ஒரு கோடு போட்டு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். சௌகரியமாக இருக்கும் அறை பெண்களுக்கு வேண்டும் என்றால் ஒரு வாரம் முழுக்க எந்த ஆண்களையும் பெண்கள் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று ஆண்கள் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்கு தர்ஷனா உட்பட சிலர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் புகைச்சல் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தான் இன்று எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்போடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா முதல் நாளே எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் எதிர்பாராததை எதிர்பார்ப்பார்கள் என்று சொல்லும் பிக்பாஸில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications