பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? விஜய் டிவி பிரபலத்துக்கு ஆப்பு.. இனி நிகழ்ச்சி நிலை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னது போல சாச்சிகா 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். ஆனால் இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் பேசி கொண்டு இருந்தனர். இதனால் ட்விட்டரில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டது.

அதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் நிகழ்ச்சிக்கு கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருந்த ரவீந்தர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். ரவீந்தரின் வெளியேற்றம் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சிக்கு பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். பிசிகல் டாஸ்க் செய்வதில் ரவீந்தருக்கு முடியாத காரியமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக மாற்றுவதற்காக பல பிளான்களை போட்டு அதை தன்னால் செயல்பட முடியவில்லை என்றாலும் பேசியே மற்றவர்களை சிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
இவர் நல்லவரா? கெட்டவரா? என்று யோசிக்கும் வகையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரமாக ரவீந்திரன் விளையாட்டு இருந்தது. ரவீந்தர் பிராங்க் செய்வது பற்றி ஆலோசித்த போது எலிமினேஷனில் நாம மூணு பேர் இருக்கோம் அதனால் மக்கள் மத்தியில் நம்முடைய பர்பாமன்ஸ் தெரிய வேண்டும் என்றால் இந்த பிராங்கை செய்வோம் என்று ஏற்கனவே பிளான் போட்டது ரசிகர்களுக்கு தெரியாது.
ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ரவீந்தர் மீது குறை சொல்ல அதை ரசிகர்களும் நம்பி இருந்தனர். ஆனால் கடைசியில் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி வந்து ரவீந்தர் ஏற்கனவே பிளான் போட்டார் என்றும் அதை தெரிந்து கொண்டு ரஞ்சித், தீபக், அருண், விஷால் மற்றும் பவித்ரா எல்லோரும் ரவீந்தர் மீது பழி போட்டு விட்டனர் என்பதை அவர்கள் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைத்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் 10 போட்டியாளர்களின் பெயர் இருக்கிறது.
அதில் தீபக், ஜாக்குலின், ரஞ்சித், சௌந்தர்யா, முத்துக்குமரன், ஜெஃப்ரி, விஷால், அர்னாவ், தர்ஷா குப்தா, சாச்சனா போன்றவர்களின் பெயர் இருக்கிறது. இதில் தற்போது வரை வெளியான விவரங்களின் படி கடைசி இடத்தில் ஜாக்குலினும் அவரைத் தொடர்ந்து அர்னாவ் இருப்பதாக கூறப்படுகிறது. ஜாக்குலின் தான் இந்த நிகழ்ச்சியில் ரவீந்தருக்கு அடுத்ததாக கண்டன்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதனாலேயே ட்விட்டரில் #Jacqueline என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்குமா என்பது கேள்விக்குறி என பலருடைய கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் ஜாக்குலின் இல்லை என்றால் அவரை தொடர்ந்து குறைவான வாக்குகளில் இருக்கும் அர்னாவ் வெளியேற்றப்படுவதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் என்ன வேணாலும் மாற்றம் ஏற்படலாம் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications