பிக் பாஸ் 8: அர்னவ்,ரவீந்தரிடம் ஜெஃப்ரி, சத்யா கேட்ட கேள்வி.. எதிர்பார்க்காத சம்பவம்! நடந்த மோதல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஜனவரி 13ஆம் தேதி இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அர்னவ் மற்றும் ரவீந்தரிடம் கேள்வி கேட்கிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்திருக்கும் நிலையில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தனர்.

ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆறு போட்டியாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுபோல கடந்த வாரத்தில் புது ரூல்ஸ் ஒன்று பிக்பாஸ் போட்டு இருந்தார். அதாவது ஏற்கனவே எவிக்ஷனாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து உள்ளிருக்கும் இரண்டு போட்டியாளர்களை ரீப்ளேஸ் செய்யப் போகிறார்கள்.
அதற்கு தகுந்தது போல அவர்களுடைய விளையாட்டு இருக்கும் என்று புதிய ரூல் அறிவித்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களுக்கும் வெளியே இருந்து ரீஎன்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு அர்னவ் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அப்போது உள்ளே வந்ததும் உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் தன்னுடைய கோபத்தை மொத்தமாக காட்டி இருந்தார். அதிலும் சத்யா சட்டை இல்லாமல் சுற்றுபவர், தடவிக்கொண்டும் நோண்டிக் கொண்டிருப்பவன் என்று ஒருமையில் திட்டி இருந்தார்.
அதுபோல அருண் மற்றும் வி ஜே விஷாலை ஜால்ராஸ் என்றும் பேசி இருந்தார். இது குறித்து சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி அர்னவிற்கு அட்வைஸ் கொடுத்திருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுக்கிறார்கள்.
அவர்கள் ரவீந்தர் மற்றும் அர்னவை தாக்கும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அர்னவ் நான் கேட்ட கேள்வி எல்லாம் மக்கள் என்னிடம் கேட்க சொன்ன கேள்வி, அதைத்தான் நான் இங்கே வந்து கேட்டேன் என்று சொல்கிறார். அதற்கு சத்யா மற்றும் ஜெஃப்ரி இருவரும் கலாய்க்கிறார்கள்.
அதுபோல ரவீந்திரிடம் எல்லாம் நடந்தது நடந்தாச்சு இனி எல்லாரும் ஃபன் பண்ணுவோம்.. என்ன அண்ணே? என்று சண்டை போடும் தோணியில் பேச, அதற்கு நாங்க எல்லாம் உங்களைவிட நல்லாவே ஃபன் பண்ணுவோம் என்று ரவீந்தர் பதிலடி கொடுக்கிறார்.
ஏற்கனவே அர்னவ் பிக் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்தபோது பேசியது அநாகரிகமாக இருந்தது என்று பலர் பேசியிருந்தார்கள். ஆனால் இப்போது அர்னவ்விற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று சத்யா மற்றும ஜெப்ரி நடந்து கொள்ளும் விதமும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications