பிக் பாஸை விட்டு வெளியே வந்த சுனிதா வெளியிட்ட முதல் போஸ்ட்.. நச்சுன்னு சொன்ன வார்த்தை!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் சுனிதா வெளியேற்றப்பட்டு இருந்தார். அவர் வெளியே வந்த பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 35 நாட்களுக்கு மேலே கடந்துவிட்டது. நிகழ்ச்சி தொடங்கும் போது 18 போட்டியாளர்கள் இருந்தனர் . இதில் ரவீந்தர், அர்னாவ், தர்ஷா குப்தா, சுனிதா என்று 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதோடு ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே களம் இறங்கி இருக்கிறார்கள்.

இந்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ஸ்கூல் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்கில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும். பிக்பாஸ் போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் ஆகவும், ஆசிரியர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.
ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் நேற்று சில சண்டை சச்சரவுகளும் நடந்தது. அதேபோல ஒரு சில இடங்களில் சில போட்டியாளர்கள் ஜாலியாக நடந்து கொண்டனர். ஆனாலும் இந்த போட்டியில் இருந்த வன்மத்தை எல்லாம் காட்டும் வகையில் தான் இன்று பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார்.
இந்த டாஸ்க் யாரெல்லாம் சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறீர்களோ அவர்களுடைய பெயரை சொல்லுங்க என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுக்க இருக்கும் நிலையில் எல்லோரும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது இருக்கும் வன்மத்தை கொட்டுகிறார்கள். அதிலும் தீபக்கிற்கு ஜாக்குலின் மீது ஏற்கனவே கோபம் இருக்கும் நிலையில் அவர் மாரல் டீச்சராக சரியாக செய்யவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட சுனிதா தான் வெளியேறியதற்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், நான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 35 நாட்கள் இருந்ததற்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி. நான் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட பாடத்தை என்னுடைய வாழ்க்கைக்கு பயன்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய பிக் பாஸ் பயண வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்திருக்க வேண்டும் உள்ளே மிச்சர் சாப்பிடும் போட்டியாளர்கள் கூட இருக்கிறார்கள். நீங்கள் கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள் உங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இது அன்ஃபேர் எவிக்ஷன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications