பிக் பாஸில் வெளியானது குறும்படம்.. சுனிதா அவ்வளவு பேசிட்டு இப்படி பண்ணலாமா? குவியும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சுனிதா செய்த செயல் குறித்த விமர்சனங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாகி வருகிறது. அதாவது சுனிதா கடந்த வாரத்தில் சாச்சிகா சாப்பாட்டை குப்பை தொட்டியில் போட போகும் போது சண்டை போட்டார். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த வேலை இப்போது குறும்படம் மூலமாக அம்பலமாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது மைண்ட் கேம். இந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு பிரபலமாக இருக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் சென்று கெட்ட பெயர் வாங்கி இருக்கிறார்கள். அதுபோல வெளியே கெட்ட பெயரோடு இருந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்து நல்ல பெயர் வாங்கிய கதையும் உண்டு. தற்போதைய 8வது சீசனில் கூட ரஞ்சித் கலந்து கொண்டு அவருக்கு ஏற்கனவே இருந்த நெகட்டிவ் விமர்சனங்களை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

பொதுவாக எல்லா மனிதர்களின் மனதிற்குள் நல்ல குணமும், கெட்ட குணமும் உண்டு. ஆனால் தனக்குள் இருக்கும் கெட்ட குணங்களும் ஏதாவது ஒரு சூழ்நிலைகளில் வெடித்து வெளியே வரும். அதை வைத்து தான் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான டிஆர்பியை கூட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழில் விஜய் டிவியில் தான் ஏழு சீசன்கள் முடிவடைந்து இப்போது எட்டாவது சீசனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. வெளியே இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து டிரைன் ஆகி நிகழ்ச்சிக்குள் செல்லும் போட்டியாளர்கள் கூட உள்ளே சென்று சொதப்பி விடுகிறார்கள். அப்படித்தான் இப்போது சுனிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து கொண்டிருக்கிறார்.

சுனிதா டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் பிரபலமாகி இருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இவர் அந்த நிகழ்ச்சியில் தப்பு தப்பாக தமிழ் பேசுவது பலராலும் ரசிக்கப்பட்டது, ஒரு சிலர் இதை விமர்சித்து வந்தனர். ஆனாலும் இவருக்கு குக் வித் கோமாளியில் அடுத்தடுத்த சீசன்களிலும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது.

சமீபத்தில் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு நாட்டாமை போல செயல்படுகிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் மேக்கப் மட்டுமே போட்டுக் கொண்டு அடுத்தவர்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று வெளியில் இருக்கும் ரசிகர்கள் கூறியது போல இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

நேற்று தர்ஷா வெளியே செல்வதற்கு முன்பு சுனிதா மீது தனக்கு இருக்கும் வன்மத்தை கக்கி விட்டார். கடந்த வாரத்தில் அன்ஷிதா மற்றும் சாச்சிகா இருவருக்கும் இடையே சம்பந்தி உணவு பிரச்சனை வெடித்தது. அப்போது சுனிதா ரொம்பவும் கோவப்பட்டு இருந்தார்.

சாச்சிகா இவர்களிடம் சண்டை போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தவர் சாப்பாடு வேண்டாம் என்று கொட்டப் போகும்போது சாப்பாடு கொட்டுனா அவ்வளவுதான் என்று எகிறி குதித்து அடித்து விடுவது போல துள்ளிக் கொண்டு இருந்தார். ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் கேமராவுக்கு தெரியக்கூடாது என்பதற்காக தட்டில் இருக்கும் சாப்பாட்டை ஒளித்துக் கொண்டு போய் குப்பையில் போடுகிறார்.

பிறகு கேமராவிற்கு மறைத்தபடியே குனிந்து கொண்டு வெளியே வருகிறார். இதை பிக் பாஸ் வீடியோவில் கவர் செய்து லைவில் போட்டு கொடுத்து விட இதை வைத்து இப்போது இணையத்தில் ரசிகர்கள் சுனிதாவை திட்டி வருகிறார்கள். தனக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்? என்று சுனிதா இப்படி செய்யலாமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த வாரம் நாமினேசன் லிஸ்டில் சுனிதா இருக்கும் நிலையில் இதற்கான பதில் இந்த வாரம் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+