பிக் பாஸ் 8: போட்டியாளராக செல்லும் இன்ஸ்டா பிரபலம்.. விஜய் டிவியில் தொடர்ந்து வாய்ப்பு இதற்கு தானா?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் insta பிரபலம் ஒருவர் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொண்டிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து ஏழு சீசன்கள் வரைக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிகழ்ச்சி தான். ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று எதிர்பார்த்து இருந்தாலும் அதற்குப் பிறகு அடுத்தடுத்த சீசன்களில் இதுதான் நடக்கும் என்று பலருக்கும் தெரிந்ததுதான்.

ஆனாலும் ஒவ்வொரு சீசன்களிலும் பஞ்சாயத்துகள் மட்டும் குறை இல்லாமல் வந்து கொண்டே இருக்கும். அதிலும் ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது இணையத்தின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்போதும் இணையத்தில் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் 24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்கள் பார்த்து விடுகிறார்கள்.
இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோ சூட்டிங் நடைபெற்று விட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதில் இன்ஸ்டா பிரபலமான டாக்டர் திவாகர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் இப்போது பல நிகழ்ச்சிகளில் திவாகர் போட்டியாளராகவும் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட டிக் டிக் டிக் நிகழ்ச்சியில் திவாகரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
அதுபோல விஜய் டிவியில் மட்டுமல்லாமல் அவர் ஜீ தமிழிலும் கடந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தனக்கு 40 வயது தாண்டி விட்ட நிலையில் தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை இந்த நிகழ்ச்சி மூலம் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒரு சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொடுத்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் இவர் விஜய், சூர்யா, அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களை போல ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பாடல்களுக்கு டான்ஸ் அடி கொண்டு வருவதும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதனாலேயே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டென்ட் அதிகமாக கிடைக்கும் என்று இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி பி முத்து, தனலட்சுமி போன்றோர் சமூக வலைத்தள பிரபலங்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் வரிசையில் டாக்டர் திவாகர் கலந்து கொண்டால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்குமா? அல்லது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துமா? என்ற உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications