பிக் பாஸ் 8: மேடையில் தர்ஷா சொன்ன வார்த்தை.. ஒரே வார்த்தையில் மடக்கிய விஜய் சேதுபதி
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கி இருக்கிறது. இதில் மூன்றாவது போட்டியாளராக தர்ஷா குப்தா கலந்து கொண்டிருக்கிறார். அவர் விஜய் சேதுபதி இடம் நான் எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல் அடுத்தவர்களை டென்ஷன் ஆக்குவது போல பேசுவேன் என்று சொல்ல, அவரை விஜய் சேதுபதி டென்ஷன் ஆக்கி விட்டிருக்கிறார்.
பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த எட்டாவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில் இப்போது போட்டியாளர்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் மூன்றாவது போட்டியாளராக தர்ஷா குப்தா கலந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி தர்ஷாவிடம் ஆரம்பத்திலேயே உங்களுக்கு இரண்டு மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்களா? என்று கேட்ட ஆமா சார் இரண்டு புள்ளி மூன்று மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்று தர்ஷா சொல்ல அப்போ நீங்க தான் பெரிய செலிப்ரிட்டி என்று சிரித்தப்படியே சொல்லிக்கொண்டு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க எப்படி இருக்க போறீங்க என்று கேட்கிறார்.
அதற்கு தர்ஷா குப்தா நான் கண்ணாடி மாதிரி சார் என்னிடம் நல்லா இருந்தா நானும் அவர்களிடம் நல்லா இருப்பேன். என்னிடம் தப்பா இருந்தா நான் அதைவிட தப்பா இருப்பேன் என்று சொல்ல, அதுதான் எல்லாருடைய இயல்பு . நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்கு பொல்லாதவன் என்ற டயலாக் எல்லாம் இங்கே சொல்லக்கூடாது நீங்கள் உங்களை ஒருத்தங்க தொந்தரவு செய்றாங்க கஷ்டப்படுத்துறாங்க என்றால் நீங்கள் அவர்களிடம் எப்படி இருப்பீங்க என்று விஜய் சேதுபதி கேட்கிறார்.
அதற்கு தர்ஷா நான் அவர்களை டென்ஷன் ஆகுற மாதிரி சிரித்தப்படியே கலாய்த்து விடுவேன் என்று சொல்ல, அவர்கள் அப்போதும் டென்ஷனாகாமல் இருந்தால் என்ன செய்வீங்க என்று மீண்டும் கேட்க, நான் அவர்கள் டென்ஷன் ஆகிற வரைக்கும் விடமாட்டேன் கலாய்த்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்ல, நான் உங்களை கோபப்படுத்தற மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் என்ன பண்ணுவீங்க? என்று கேட்க அதற்கு தர்ஷா பதில் எதுவும் சொல்ல முடியாமல் சிரித்து விடுகிறார்.
பிறகு கமல்ஹாசனிடம் ஒவ்வொரு போட்டியாளர்களும் நான் உங்களுடைய தீவிர ரசிகர் என்று டயலாக் சொல்வது போலவே தர்ஷாவும் விஜய் சேதுபதி இடம் சொல்லி இருக்கிறார். அதாவது சார் நீங்க உங்களுடைய பேட்டிகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். அதில், நீ என்னவாகப் போகிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்று சொல்வீங்க. அதுபோல நான் ரெண்டு வருஷமா உங்களோடு ஜோடியா நடிக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கிறேன்.
இந்த சீசனில் எனக்கு கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. அப்போது நீங்களும் இந்த சீசனில் தொகுத்து வழங்கப் போறீங்க என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்போ உங்க பக்கத்தில் மேடையில் நிற்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி பெரியதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியா என்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் டிராபியை மட்டும் கொடுத்து இதை நீங்கள் நன்றாக விளையாட என்னிடம் கொடுத்துவிட்டு நிஜ டிராபியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications