ஹிந்தியில் ஸ்ருதிஹா செயலால் தமிழ் பிக் பாஸில் நடந்த மாற்றம்.. பாவம் அந்த பொண்ணு! ஏமாத்திட்டாங்களே!
சென்னை: தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் தமிழ் நடிகையான ஸ்ருதிகா செய்த செயலை காப்பியடிக்கும் விதமாக இருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. அதே நாளில் ஹிந்தியில் 18வது சீசன் தொடங்கப்பட்டது. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக அங்கு கலந்து கொண்ட தமிழ் நடிகை என்ற பெயரோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் அவருக்கு அங்கு நெகட்டிவ் அதிகமாக வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது பாசிட்டிவ் கிடைத்து வருகிறது. பிக் பாஸுக்கு உள்ளேயும் ஒரு சிலர் அவருடைய உண்மையான நட்போடு பழகுகிறார்கள். சிலர் அவரிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து கடந்த வார நாமினேஷனில் கூட ஸ்ருதிகா அங்கிருக்கும் போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கி இருந்தார். நீங்க என்னை கேலி செய்றீங்க நான் பேசும் வார்த்தைகளை வைத்து என்னுடைய முதுகுக்கு பின்னால் நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். நீங்க என்னை கேலி செய்வதை புரிந்து கொள்ள முடியாத ஆள் நான் கிடையாது.
நான் தமிழ்நாட்டு பொண்ணு தமிழ் பாரம்பரிய படி தான் நான் பேசி பழகுறேன் என்று பதிலடி கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று கூட அந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதாவது நேற்று சாக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் ரொம்பவும் விரும்பும் ஒரு பொருளை சாக்ரிஃபைஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் சாப்பாடு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்போது அங்கிருக்கும் ஒரு பெண் ஒரு மோதிரத்தை இது என்னுடைய அப்பா எனக்காக தந்தது இதை வேறு வழி இல்லாமல் சாக்ரிஃபைஸ் செய்கிறேன் என்று கதறி அழுகிறார். அப்போது ஸ்ருதிகா அந்த பெண்ணை சமாதானம் செய்கிறார். ஆனால் கடைசியில் அந்த மோதிரம் அவருடைய அப்பா கொடுத்ததே இல்லை என்றும் நான் அழுது நடித்தது எல்லாம் சும்மா என்றும் அந்த பெண் சொல்லிவிட இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ருதிகா ஏமாந்து போயிருக்கிறார்.
இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸில் அடிக்கடி தமிழில் பேசி விடுகிறார். அவரிடம் அங்குள்ள பிக் பாஸ் சில நேரங்கள் தமிழில் பேசுகிறார். இது இணையத்தில் அதிகமாக பாராட்டப்படுகிறது இப்போது தமிழ் பிக் பாஸில் இதையே ஃபாலோ பண்ண தொடங்கி இருக்கிறார்கள். அதாவது இன்று சுனிதா ஹிந்தியில் சில வார்த்தைகளை அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.
அப்போது பிக் பாஸ் ஹிந்தியில் சுனிதாவிடம் பேசுகிறார். இது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஒரு சீசனில் ஒரு போட்டியாளர் அதிகமாக மலையாளத்தில் பேசுகிறார் என்று கமல்ஹாசனே கண்டித்து இருந்தார். இது தமிழ் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியில் தமிழில் தான் பேச வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
அதுபோல உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் பேசினால் கூட சில நேரங்களில் பிக் பாஸ் தமிழில் பேசுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் இப்போது ஹிந்தி பிக் பாஸ் பார்த்து அதே போல தமிழ் பிக் பாஸும் காப்பி அடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications