பிக் பாஸ்ல டாஸ்க்கா? இல்ல கேங் ரேப்பா? வனிதா கேட்ட கேள்வி.. வந்து விழுந்த பதில்! அப்போ விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் காயின் டாஸ்கில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் மீது காயினையும் ஒட்டுகிறேன் என்று அவர்களை கீழே தள்ளி மொத்தமாக மேலே விழுந்திருக்கின்றனர். இந்த டாஸ்க் பார்த்து வனிதா கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சைகளையும் பிரித்து பார்க்க முடியாது. அந்த நிகழ்ச்சியில் எப்போது பூகம்பம் வெடிக்க போகுது? எப்போது புஷ் என்ன போகிறது என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் சர்ச்சைகள் தான் அந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் பல லட்சங்களை கொட்டி போட்டியாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அடுத்தவர்களை விட நாம் அதிகமான கண்டன்ட் கொடுக்க வேண்டும் என்று எல்லாரும் கேமரா முன்பு பர்பாமன்ஸை குவிக்கிறார்கள். அதிலும் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் எல்லாமே சின்னத்திரை பிரபலங்களாக கலந்து கொள்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சையமான முகங்களாக இருக்கிறார்கள். ஆனால் முதல் வாரம் முழுக்க சண்டை சச்சரவுகளோடு இருந்த போட்டியாளர்கள் இரண்டாவது வாரத்தில் இருந்து விளையாட்டின் தன்மையை புரிந்து கொண்டு விளையாட்டை விளையாட தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனாலும் அதிகமாக இங்கு கண்டண்டு கிடைக்கவில்லை என்று பிக் பாஸ் அடிக்கடி இவர்களுக்கு டாஸ்க் என்கிற பெயரில் பிரச்சனைகளை உண்டு செய்து கொண்டிருக்கிறார். இது வழக்கமாக நடப்பதாக இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் டாஸ்க்கை சரியாக புரிந்து கொள்ளாமல் ஏதோ தானோ என்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் கூட பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்து இருந்தார். அதாவது இந்த வாரத்தில் நாமினேஷன் பிரீ டாஸ்க் பெறுவதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கும். மூன்று போட்டிகள் நடைபெறும் நிலையில் அதில் யார் இறுதியாக ஜெய்க்கிறார்களோ அவர்கள் இந்த வார நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட்டை பெறலாம் என்று சொல்லி இருந்தார்.

அதற்கு முதலில் ஒரு காயின் கொடுக்கப்பட்டது. அந்த காயினை ஆண்கள் பெண்கள் மீது ஒட்ட வேண்டும். பெண்கள் ஆண்கள் மீது ஒட்டப்பட வேண்டும் பஸர் அடிக்கும் இப்போது யார் தரப்பில் அதிகமான போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்களோ அவர்கள் ஜெயித்ததாக அர்த்தம் என்று பிக் பாஸ் கூறி இருந்தார்.

இதற்கு முன்பு இதுபோல டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது கவின், தர்ஷன் போன்றோர் கலந்து கொண்ட சீசனில் இந்த டாஸ்க் விளையாடும் போது சேரன் கீழே விழுந்து அடிவாங்கி இருந்தார். ஆனால் விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தது. இந்த சீசனில் ஆண்கள் எல்லோரும் கோழி பிடிப்பது போல பெண்களை பிடித்து அவர்களின் முதுகில் ஒட்டி விடுகிறார்கள்.

அதுவும் ஓடி விளையாடுவது கிடையாது. எல்லாம் உருண்டு விளையாடுகிறார்கள். ஒருவர் கிடைத்துவிட்டால் மொத்த பேரும் அவர் மேலே விழுந்து விடுகிறார்கள். இந்த சீசனில் பெண்கள் பெரிய அளவில் ஸ்ட்ராங்காக இருந்தது போல தெரியவில்லை. ஒரு ஆண் பிடித்தாலே அவர்களால் தட்டி திமிரி ஓட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களிடம் மொத்த ஆண்களும் மேலே விழுந்து உருண்டு பிரளுகின்றனர். இதை பார்த்த வனிதா தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார். அதாவது இந்த டாஸ்கை பார்க்கும்போது இது விளையாட்டா இல்ல கேங் ரேப்பா என்று சந்தேகம் வருகிறது. ஒரு பெண் மீது இத்தனை பேர் எப்படி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்?

டாஸ்க் என்றால் ஓடி விளையாடனும் இப்படி தன்னுடைய பலத்தை காட்டி பெண்ணை அடக்க கூடாது என்று கோபமாக பேசியிருக்கிறார். இதற்கு இணையத்தில் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதில் ஒரு சிலர் டாஸ்க் என்றால் அப்படி இப்படி இருக்க தானே செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அடிபட்டது என்று கூறி இருக்கின்றனர்.

தர்ஷா குப்தா ரஞ்சித்தின் ஆண்குறியில் மிதித்து விட்டார். அவர் ஐஸ்கட்டி வைத்துக்கொண்டு வலியில் எவ்வளவு நேரம் சுற்றிக் கொண்டிருந்தார். அது வனிதா பார்க்கவில்லையா என்று சிலர் கேட்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் இது பற்றி சுனிதா கூட நாம் ஆண்கள் மீது கோபப்படக்கூடாது. இந்த டாஸ்கை ரெடி பண்ணுன பிக் பாஸ் மீதுதான் கோவப்படணும் என்று பேசி இருந்தார்.

ஆனால் வனிதா விளையாட்டை வேற மாதிரி திசை திருப்புகிறார் என்று கருத்து கூறி வருகிறார்கள். எது எப்படியோ இந்த டாஸ்கில் ஆண்கள் விளையாடியது சரியா? தவறா? என்று இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+