பிக் பாஸ் ரசிகர் கேட்ட கேள்வி! பிஆர் பற்றி ஓபனாக பேசிய விஜய் சேதுபதி.. செம பதிலடி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பிஆர் வைத்து போட்டியாளர்கள் வாக்கு சேகரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு சர்ச்சை கிளம்பி விடுகிறது அதிலும் கடந்து சில சீசன்களாக பிஆர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது சீசனில் அசீம் ஜெயித்தது பி ஆர் சப்போர்ட்டால் தான் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அதை நிரூபிக்க முடியவில்லை.

ஆனாலும் அதைத் தொடர்ந்து தற்போதைய எட்டாவது சீசனிலும் சில போட்டியாளர்கள் பி ஆர் உதவியோடு வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வதந்திகளுக்கு நேற்று விஜய் சேதுபதி பதிலடி கொடுத்திருக்கிறார். அப்போது கேமரா முழுமையாக சௌந்தர்யாவை போக்கஸ் செய்தது. இது சௌந்தர்யா பிஆர் வைத்து வாக்கு அளிக்கப்படுகிறது என்று சொல்ல வருகிறார்களா? அல்லது சௌந்தர்யாவிற்கும் இந்த பிஆர்க்கும் சம்பந்தமில்லை என்று பிக் பாஸ் காட்டுகிறாரா? என்று குழப்பம் ரசிகர்களுக்கும் வந்திருக்கும்.
அந்தப் பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் பிஆர் குறித்த சர்ச்சைகளுக்கு விஜய் சேதுபதியிடம் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது ஒரு விழா காலத்தில் பத்து படம் வருகிறது என்றால் அதில் சில படங்களுக்கு மட்டும் அதிகமான பிரமோஷன் இருக்கும். சில சின்ன படங்களுக்கு எந்த ப்ரோமோஷனும் இருக்காது. ஆனால் கதை அழகாக இருக்கும்.
பெரிய படங்களுக்கு கிடைக்கும் ப்ரமோஷனால் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் போய்விடுகிறது. பெரிய படங்கள் நல்லா இருக்கிறதோ இல்லையோ அது வேற கதை ஆனால் சின்ன படமும் வெளியே தெரியாமல் போவதற்கு காரணம் அந்த பெரிய படத்தோட பிரமோஷன் தான்.

அது போல தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து சுனிதா, மஞ்சரி போன்றவர்கள் வெளியே போகும் போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உள்ளுக்குள் சிலர் எதுவும் செய்யவில்லை என்றாலும் பி ஆர் ஏதோ செய்து கொண்டிருப்பதால் மஞ்சரி சுனிதா போன்றவர்கள் வெளியே தெரியாமல் போய் விட்டார்களோ என்று எங்களுக்கு தோணுகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்
அதற்கு விஜய் சேதுபதி, உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் நான் நடித்த கடைசி விவசாயி திரைப்படம் பலருடைய பாராட்டை பெற்றது. விமர்சகர்கள் கூட அந்த படத்தை பாராட்டினார்கள். ஆனால் மக்கள் அந்த படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த படம் நல்ல படம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாங்கள் அவர்கள் மீது குறை சொல்ல முடியாது.
அதேபோல மகாராஜா திரைப்படம் வந்தது அந்த படத்தை மக்கள் கொண்டாடினார்கள். அந்த படத்தை எடுத்த நித்திலன் இது பெரிய அளவில் வெற்றிபெறும் என்று நினைத்தார். ஆனால் நான் ரொம்பவும் பயந்துட்டு இருந்தேன். நித்திலனுக்கு அது இரண்டாவது படம் அப்போவே அவருக்கு தைரியம் இருந்தது ஆனால் எனக்கு ஐம்பதாவது படம் எனக்கு வெற்றி பெறுமா என்று பயம் தான் இருந்தது.
அதுபோல மக்கள் அவர்களுக்கு பிடித்த சிலதை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நீங்கள் சொன்ன கருத்து எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது உங்களுடைய கருத்து. நான் சொல்வது என்னுடைய கருத்து. எனக்கு மட்டும் நான் சொல்வது சரி என்று ஆகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அதற்காக பி ஆர் சப்போர்ட் வைத்தால் அவர்களால் வெற்றி பெறும் என்று இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications